12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத 50,000 மாணவர்களை மீண்டும் தேர்வு எழுத நடவடிக்கை : பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 17, 2023

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத 50,000 மாணவர்களை மீண்டும் தேர்வு எழுத நடவடிக்கை : பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை

 

தமிழ்நாடு பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி நடப்பு ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 13 தொடங்கி ஏப்.3-ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளில் மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. தமிழகம், புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள 3,225 மையங்களில் 8.75 லட்சம் மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுத இருந்தனர். 23,747 தனித்தேர்வர்கள், 5,206 மாற்றுத் திறனாளிகள், 6 மூன்றாம் பாலினத்தவர், 90 சிறைகைதிகளும் இதில் அடங்குவர். இந்நிலையில் மொழித் தேர்வை 50,000 பேர் தேர்வு எழுதவில்லை என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.


12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத 50,000 மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.மார்ச் 24 மற்றும்  ஏப்.10- மற்றும் ஏப்ரல் 24-ல் தேதிகளில் சிறப்பு பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்த பள்ளிக்கல்வித்துறையின் மாநில திட்ட இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்காத நிலையில் மேலாண்மை குழுக்கூட்டம் நடத்த அறிவுறுத்தியுள்ளார்.

12-ம் வகுப்பு தேர்வில் கலந்து கொள்ளாத மாணவர்களின் விவரங்களை கண்டறிய வேண்டும். மாணவர்களின் விவரங்களை சேகரித்து உரிய ஆலோசனை வழங்கி துணைத்தேர்வில் பங்கேற்க வைக்க வேண்டும். மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பொதுத்தேர்வு முக்கியத்துவம் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை அனைத்து மாணவர்களும் எழுதுவதை பள்ளி மேலாண்மை உறுப்பினர்கள் உறுதி செய்ய வேண்டும். நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராத மாணவர்களை சிறப்பு பயிற்சி மையங்களுக்கு அழைத்து வர வேண்டும்.

மாணவர்களின் பெற்றோருக்கு கவுன்சிலிங் அளிக்க வேண்டியுள்ளது. மொழித் தேர்வை எழுதாத மாணவர்களை பிற தேர்வுகள் எழுத வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேலைக்காக பெற்றோர் இடம்பெயர்தல் உள்ளிட்ட காரணங்களால் மாணவர்கள் தேர்வு எழுத முடியாதது தெரிய வந்தது. அச்சம் காரணமாக தேர்வுக்கு வரமுடியாத மாணவர்களையும் அடையாளம் கண்டு அச்சம் போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களையும் தேர்வு எழுத வைக்கும் வகையில் பெற்றோர் ஒத்துழைப்பு கோர முடிவு செய்யப்பட்டுள்ளது. மொழிப்பாடத் தேர்வை எழுதாத மாணவர்களை பிற தேர்வுகளை எழுத வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

5 comments:

  1. குரூப் 4 தேர்வுல select ஆகற நண்பர்கள் பள்ளிக்கல்வி துறை போன்ற சில துறைகள் தவிர்ப்பது நலம் ஏனெனில் அடுத்த பதவி உயர்வு வர 10 ஆண்டுகள் ஆகும் இரண்டாம் increment வாங்க probation முடிக்க மினிமம் 5 ஆண்டுகள் ஆகும் மேலும் வேறு exam படிக்க டைம் கிடைக்கும் என கனவு காணலாம் கொத்தடிமை பணி இன்னும் பிற.. உண்மையான்னு கேட்டுட்டு பணியில் சேருங்க. பாதிக்கப்பட்டவங்கள கேளுங்க

    ReplyDelete
  2. உண்மை உருப்படி இல்லாத துறை. கொத்தடிமை மட்டுமல்ல தினப்படி போக்குவரத்து படி போன்ற படிகளும் துறையில் கிடைக்க வாய்ப்பில்லை. ஆகவே...? அரசு பணி மற்றும் அலுவலகப் பணிகளுக்கும் தாங்கள் சம்பளத்தில் இருந்து செலவினம் செய்ய வேண்டிய வரும். கல்வித் துறையில் இளநிலை உதவியாளர் என்றால் ஒருவரும் மதிப்பதில்லை.

    ReplyDelete
    Replies
    1. பிறந்தால் கிளெர்க் ஆக பிறக்க கூடாது அதுவும் பள்ளிக்ல்வி துறை கிளெர்க் ஆக பிறக்கவே கூடாது 😄😄😄

      Delete
  3. எல்லா பணியிடங்களிலும் தொகுப்பு ஊதியம் வழங்கி நிரப்பி ஒவ்வொரு ஆண்டையும் அதிமுக ஆட்சியில் 10 ஆண்டு காலம் கடத்தியது போல் நீங்களும் செய்து தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வாழ்க்கை வீணாகிவிட்டது போன்று நடந்து கொள்ளாதீர்கள் ஐயா. நீங்கள் வந்தால் நல்லது நடக்கும் என்று நம்பி வாக்குகள் அளித்தோம் என்பதை மறவாதீர்

    ReplyDelete
  4. இன்றைய ராஜ் டிவியில் ஒளிபரப்பான விவாதம் கல்வித்துறை சார்ந்த விவாதம். பகுதி நேர ஆசிரியர்கள் 10 ஆண்டுகள் பணிபுரிந்து 10000 சம்பளம் தான் பெறுகின்றனர். இதை வைத்து என்ன செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பினார். நல்ல கேள்வி.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி