பிளஸ் 2 பொது தேர்வு அரசு புதிய உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 6, 2023

பிளஸ் 2 பொது தேர்வு அரசு புதிய உத்தரவு

 

பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வுகளில், மூத்த முதுநிலை ஆசிரியர்களுக்கு, முதன்மை கண்காணிப்பாளர் பொறுப்பு வழங்க, அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.


தமிழக பள்ளிக்கல்வி துறையின் பாடத் திட்டத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, இம்மாதம், 13, 14ம் தேதிகளில் பொது தேர்வுகள் துவங்குகின்றன.


இந்நிலையில், தேர்வு மையங்களில், தலைமை ஆசிரியர்களை மட்டுமே, முதன்மை கண்காணிப்பாளர்களாக நியமிக்க வேண்டும் என, அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டிருந்தது.


இதனால், பல மாவட் டங்களில், முதன்மை கண்காணிப்பாளர் பணிக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டது.


எனவே, அரசு, அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை மட்டுமின்றி, பணி மூப்பில் முன்னிலையில் உள்ள முதுநிலை ஆசிரியர்கள் உள்ளிட்டோரையும் முதன்மை கண்காணிப்பாளர்களாக நியமிக்கலாம்.


இவ்வாறு, அரசு தேர்வுத்துறை சார்பில், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி