கியூட் தேர்வு இந்தாண்டு 3 முறை நடத்தப்படும்: யுஜிசி தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 16, 2023

கியூட் தேர்வு இந்தாண்டு 3 முறை நடத்தப்படும்: யுஜிசி தகவல்

 

பல்கலை.களுக்கான பொது நுழைவுத் தேர்வு இந்தாண்டு 3 முறை நடத்தப்பட உள்ளது என்று யுஜிசி தலைவர் தெரிவித்துள்ளார். பல்கலைக் கழகங்களுக்கான பொது நுழைவு தேர்வை (சியூடிஇ) தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. இந்நிலையில், கியூட் தேர்வு இந்தாண்டு 3 முறை நடத்தப்படும் என்று பல்கலை மானிய குழு (யுஜிசி) தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்தார். இது தொடர்பாக பேட்டியளித்த அவர் கூறியதாவது:


பல்கலைக் கழங்களுக்கான பொது நுழைவு தேர்வில் கடந்தாண்டு பல்வேறு தொழில்நுட்ப குளறுபடிகள் ஏற்பட்டன.  , இந்த முறை மாணவர்கள் தொழில்நுட்ப பிரச்னைகள் பற்றி கவலைப்பட தேவையில்லை.

 கியூட் தேர்வை ஜேஇஇ, நீட் தேர்வுகளுடன் சேர்த்து நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அப்படி நடத்தும் பட்சத்தில், அது பற்றி 2 ஆண்டுகளுக்கு முன் கூட்டியே மாணவர்களுக்கு அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி