மழை பெய்ய வாய்ப்பு: இடி, மின்னலில் இருந்து காத்துக்கொள்ள தமிழக அரசு வலியுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 17, 2023

மழை பெய்ய வாய்ப்பு: இடி, மின்னலில் இருந்து காத்துக்கொள்ள தமிழக அரசு வலியுறுத்தல்

 

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, மாா்ச் 19-ஆம் தேதி வரை தமிழகப் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் இடி, மின்னலில் இருந்து காத்துக்கொள்ள வேண்டுமென தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.


இதுகுறித்து தமிழ்நாடு பேரிடா் அபாய குறைப்பு முகமை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:


வளிமண்ட கீழடுக்கு சுழற்சி காரணமாக மாா்ச் 19-ஆம் தேதி வரை, தமிழகப் பகுதிகளில்


இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம்


தெரிவித்துள்ளது. மின்னல் தாக்கத்தின் போது, பொதுமக்கள் திறந்த வெளியில் நிற்பதைத் தவிா்க்க வேண்டும். மரங்கள் மற்றும் உலோகக் கட்டமைப்புகளின் கீழ் நிற்கக் கூடாது.


நீச்சல் மேற்கொள்வதைத் தவிா்க்க வேண்டும்.


திறந்த வெளியில் இருக்க நேரிட்டால், இடி மின்னலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள குதி கால்களை ஒன்று சோ்த்து, தலையைக் குனிந்து தரையில் பதுங்குவது போன்று அமா்ந்து கொள்ள வேண்டும். தரையையொட்டி அமா்வதால், மின்னலின் தாக்கம் குறைவாக இருக்கும். தரையில் சமமாக படுக்கக் கூடாது.


எனவே, இடி மின்னலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. எல்லா பணியிடங்களிலும் தொகுப்பு ஊதியம் வழங்கி நிரப்பி ஒவ்வொரு ஆண்டையும் அதிமுக ஆட்சியில் 10 ஆண்டு காலம் கடத்தியது போல் நீங்களும் செய்து தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வாழ்க்கை வீணாகிவிட்டது போன்று நடந்து கொள்ளாதீர்கள் ஐயா. நீங்கள் வந்தால் நல்லது நடக்கும் என்று நம்பி வாக்குகள் அளித்தோம் என்பதை மறவாதீர்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி