விபத்தால் மாணவர்கள் இறந்தால் அவர்களது பெற்றோர்களுக்கு நிவாரணத்தொகை வழங்கும் திட்டத்தின் அரசாணை மற்றும் விண்ணப்ப படிவம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 13, 2023

விபத்தால் மாணவர்கள் இறந்தால் அவர்களது பெற்றோர்களுக்கு நிவாரணத்தொகை வழங்கும் திட்டத்தின் அரசாணை மற்றும் விண்ணப்ப படிவம்

தமிழக அரசு பள்ளி மாணவர்கள் குடும்பத்தின் வாழ்வாதாரத்திலும் பங்கேற்கும் தமிழக அரசின் அசத்தல் அரசாணைகள்...127/2005,17/2018....


தமிழக அரசு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் வாழ்வாதாரத்திலும் பங்கெடுத்து அவர்களுக்கு  நிதி உதவி செய்து மாணவர்கள் குடும்பத்தில் பெற்றோர் சாலை விபத்தில் இருந்தாலோ அல்லது மாணவர்கள் சாலை விபத்தில் இருந்தாலோ அவர்களின் குடும்பத்தினருக்கு ரூபாய் 75000 மற்றும் ஒரு லட்சம் என நிதி உதவி செய்து அவர்களின் குடும்பத்தில் ஒருவராகவும் தமிழக அரசு பங்கெடுத்து வருகிறது.  கடந்த 2005ம் ஆண்டு மற்றும் 2018ம் ஆண்டு முதல் நடைமுறையில்  இருந்து வரும் இந்த இரண்டு  நிதி உதவி திட்டங்கள் மற்றும் . (தமிழக  அரசாணைகள் 39,127/2005 மற்றும் 17 /2018 தான் )இதன் சிறப்பம்சங்கள் என்ன என பார்ப்போம்.


தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை தமிழகத்தில் உள்ள அரசு,அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு செய்து வருகிறது.

இலவசமாக புத்தகங்கள் , பாடகுறிப்பேடுகள், சீருடைகள் என எண்ணிலடங்கா உதவிகளை செய்து வருகிறது..இதற்காக வருடந்தோறும் பல கோடிக்கணக்கான ரூபாய் நிதியினை தனது பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்து வருகிறது.


இதில் உள்ள பல நலத்திட்டங்களுள் இலவச  கல்வி என்பதுடன் நில்லாமல்  மாணவர்களின் வாழ்வாதாரத்திற்கும் அரசு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 


தமிழகத்தில் சாலை விபத்தில் பெற்றோர் உயிரிழக்கும்போது அந்த குடும்பத்தில் உயிரிழந்த பெற்றோரால் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களின் எதிர்கால உயர்கல்வி பாதிக்கப்படும் என நினைத்த தமிழக அரசு கடந்த 2005ம் ஆண்டு அரசாணை 39,127 /2005 ன் படி ஆணை பிறப்பித்து  பாதிக்கப்பட்ட குடும்பத்தில் அரசு பள்ளியில் பயின்றுகொண்டிருக்கும் மாணவர்களுக்கு   ரூபாய் 50000 நிதி உதவி அளித்து அந்த நிதியினை வைப்புத்தொகையாக அரசு நிறுவனங்களில் வைத்திருந்து அவர்கள் உயர்கல்வி பயிலும்போது அந்த வைப்புத்தொகையை உயர்கல்வி பயில நிதி உதவித்தொகையாக  வழங்கி வருகிறது. இந்த நிதி உதவித்தொகை கடந்த 2014ம் ஆண்டு  அரசாணை 195/2014  ஆணை வெளியிட்டு 50000 ஆக இருந்த உதவித்தொகையினை ரூபாய் 75000 ஆக உயர்த்தி வழங்கி வருகிறது  என்பது  நம்மில் எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும்....


தமிழக அரசின் மற்றுமொரு அரசாணை 17- (07.02.2018 )ன்படி மாணவர் விபத்தில் இறந்துவிட்டால் அந்த மாணவரின் குடும்பத்தினருக்கு ரூபாய் ஒரு லட்சம் பணம் (இழப்பீடு) நிதி உதவி மற்றும் காயமடைந்த மாணவர்களுக்கு 25000 முதல் 50000 வரை நிதி உதவி  அந்த மாணவரின் மருத்துவ செலவினங்களுக்காக அந்த மாணவரின் பெற்றோர்களுக்கு வழங்கி வருகிறது. இதற்கான விண்ணப்பம் கல்வித்துறை மூலமாக பெற்றோர் விண்ணப்பித்து பயன் பெற முடியும்.


தமிழக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும்1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் பெற்றோர் சாலை விபத்தில் ஒருவரோ அல்லது இருவருமோ விபத்தால் உயிரிழந்தாலோ அல்லது , விபத்தால் நிரந்தர முடக்கம் அடைந்திருந்தால்  அந்த குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு அரசு பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கும் தனித்தனியாக விண்ணப்பித்து ரூபாய்75000 பெறலாம். உயர் கல்வி பயில அரசு வழங்கும் இந்த கல்வி உதவித்தொகை நிதியினை பெறுவதற்கு விண்ணப்பம் கல்வித்துறை வழியாகவே மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.


மேற்கண்ட இரண்டு மாணவர் ,அவர்தம் குடும்பத்தினர் வாழ்வாதாரம் சார்ந்த திட்டங்களுக்கு விண்ணப்பிக்க சாலை விபத்தில் இறந்த பெற்றோரின் குழந்தைகள் பெற்றோர் இறக்கும்போது தமிழக.அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் 1 முதல் 12ம் வகுப்புவரை ஏதேனும் ஒரு வகுப்பில் படித்துக்கொண்டிருக்க வேண்டும்.விண்ணப்பத்துடன் இறந்த பெற்றோரின் காவல்துறை முதல் தகவல் அறிக்கை,உடற்கூராய்வு சான்று, இறப்பு சான்று,வாரிசு சான்று, வருவாய் முடக்க சான்று,விதவை சான்று (தந்தை இறந்திருந்தால்),வருமானச் சான்று,உயிருடன் உள்ள பெற்றோரின் குடும்ப அட்டை ,ஆதார் அட்டை, மாணவரின் ஆதார் அட்டை, உயிருடன் உள்ள பெற்றோர் மாணவர் இருவரின் பெயரில் இணைத்து தேசிய வங்கி ஒன்றில் துவக்கப்பட்ட சிறுசேமிப்பு கணக்கு எண் விபரம் இந்த சான்றுகளின் நகல்களுடன் பூர்த்தி செய்த 3 பக்க விண்ணப்பம்,பள்ளியில் இருந்து வழங்கப்படும் படிப்புச் சான்று இவற்றுடன் 3.பக்க தமிழ்நாடு மின்விசை கழகத்தின் வைப்புத்தொகைக்கான பூர்த்தி செயத விண்ணப்பம் இவற்றில் மாணவரின் புகைப்படம் இணைத்து பள்ளி தலைமை ஆசிரியர் வழியாக சார்ந்த வட்டார கல்வி அலுவலகம்  வழியாக மாவட்ட கல்வி அலுவலருக்கு விண்ணப்பிக்க வேண்டும் .மாவட்ட கல்வி அலுவலர் மாணவரின் விண்ணப்பத்தினை பரிசீலித்து சென்னையில் உள்ள கல்வித்துறை தலைமைக்கு அனுப்புவார்கள் அதற்கான பரிந்துரை செய்த உத்தரவு நகல் பெற்றோர்  மற்றும் சார்ந்த பள்ளிக்கு வழங்கப்படும்.விண்ணப்பத்தினை பள்ளிகல்வித்துறைக்கு பரிந்துரை செய்து அனுப்பியபின்னர் மாவட்டம் முழுவதும் பெறப்பட்ட விண்ணப்பங்களை மாநில முன்னுரிமை  அடிப்படையில் ரூபாய்75000ஐ   5 ஆண்டுகளுக்கான வைப்புத்தொகையாக பத்திரம் தயார் செய்யும் தமிழ்நாடு மின்விசை கழகம் கல்வித்துறை வழியாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு வைப்புத்தொகை பத்திரங்களை அனுப்புவார்கள். அந்த வைப்புத்தொகை பத்திரம்  ,விண்ணப்பித்த மாணவரின்குடும்பத்திற்கு வழங்குவர். மாணவரின் வயது 21 ஆகும்போது அந்த வைப்புத்தொகைக்கான வட்டியுடன் 75000 சேர்த்து பணமாக மாணவர் பெற்றுக்கொள்ள இந்த அரசாணை வழிசெய்கிறது. இந்த விண்ணப்பம் தயார்செய்ய விண்ணப்பதாரர் அவர் சார்ந்த வட்டாச்சியரிடம்  வருவாய் முடக்க சான்று பெற வேண்டும்.இந்த சான்று பெற நீண்ட நாட்களாகிறது இதனை எளிமைப்படுத்தினால் காலதாமதம் ஏற்படுவது தவிர்க்கலாம் என இந்த சான்று கேட்டு பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கையாக உள்ளது.


இதேபோல அரசாணை 17/2018ன்படி விபத்தால் இறந்துபோன மாணவரின் பெற்றோருக்கு ரூபாய்1 லட்சம் நிதி உதவி பெற அந்த மாணவர் பயின்ற பள்ளி வழியாக மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வித்துறைக்கு)  முதன்மை கல்வி அலுவலர் (மேல்நிலை கல்வித்துறைக்கு) விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு ஆவனங்களாக இறந்துபோன மாணவரின் காவல்துறை முதல் தகவல் அறிக்கை இறப்புச்சான்று, வாரிசு சான்று, பெற்றோரின் விண்ணப்பம் ,பள்ளி தலைமை ஆசிரியரின் பரிந்துரை கடிதம் ,மாணவரின் ஆதார் அட்டை நகல், பெற்றோரின் ஆதார் அட்டை நகல், பெற்றோரின் குடும்ப ட்டை நகல் மற்றும், பெற்றோரின் வங்கி கணக்கு புத்தக  நகல் இவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். சார்ந்த மாவட்ட கல்வி அலுவலர் தொடக்க கல்வி  ,அல்லது முதன்மை.கல்வி அலுவலர் பரிந்துரை செய்து பள்ளி கல்வி துறைக்கு அனுப்பி அங்கு அதிகாரிகளின் பரிந்துரை ஏற்று தொடர்புடைய பெற்றோருக்கு நிதி உதவி அவர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்படும். இந்த முறை மாணவர் விபத்தால் இறந்துபோனாலோ, கடுமையான அல்லது லேசான காயமடைந்திருந்தாலோ அதற்கேற்றாற்போல் இறப்புக்கு ஒரு லட்ச ரூபாயும்,காயங்களுக்கு 25000 முதல் 50000 வரை நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.


இந்த இரண்டு திட்டங்கள் குறித்து தமிழக  அரசின் அரசாணைகள் அரசாணை எண் 39/2005,195/2014,1 7/2018 தமிழக அரசால் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டு இருந்தாலும் இன்னும் பலருக்கு தெரியாமல் உள்ள நிலையில் , இந்த திட்டம் அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கு சென்று சேர வேண்டும் என.விழிப்புணர்வு ஏற்படுத்தி பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு இதனை பெறுவதற்கு வழிமுறைகளை செய்து வருவதோடு இல்லாமல் பாதிக்கப்பட்ட மாணவர் ,பெற்றோர்களுக்கு இலவசமாக விண்ணப்பித்து மாணவர்கள் ,ஆசிரியர்கள்,பொதுமக்கள் இடையே, விழிப்புணர்வு செய்துவருகிறார் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியத்தில் குளவாய்ப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வரும் அரசு பள்ளி ஆசிரியர்  திரு லி.நாகராஜன். இவரை 9865149705 என்ற எண்ணில் தொடர்புகொண்டு பயன்பெறலாம்.


இவர் தான் பணிபுரிந்து வரும் புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமன்றி, தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.  

இவர் செய்து வரும் விழிப்புணர்வு மூலம்அரசு பள்ளிகளில் இந்த விபரங்கள் மாணவர்கள் ஆசிரியர்கள் தெரிந்து ,தற்போது  பாதிப்புக்குள்ளாகி உள்ள அரசு அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள்  இவர்மூலம் இலவசமாக விண்ணப்பம் பெற்று இந்த திட்டத்தின்கீழ் இன்று வரை பலரும்பயனடைந்து வருகின்றார்கள் என்பது பாராட்டுதலுக்குரியது. இவரை போல அனைவரும் சேவை செய்ய முன்வர வேண்டும் 


தமிழக அரசின் இந்த திட்டம் பல ஆண்டுகளாக இருப்பது தெரிந்தும் தெரியாமலும் இருக்கும் பாதிக்கப்பட்ட மக்கள் அறிந்துகொள்ள வேண்டும். இதனை முழுமையாக மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே இந்த விழிப்புணரவு செய்தி...


GO NO : 17 , Date : 07.02.2018 - Download here


Death Claim Form - Download here...No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி