அரசுப் பள்ளியில் 'ஓவியக் கண்காட்சி' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 14, 2023

அரசுப் பள்ளியில் 'ஓவியக் கண்காட்சி'

 

திருப்பூர் அரசுப் பள்ளியில் 'ஓவியக் கண்காட்சி' 


இன்று 14.03.2023 செவ்வாய்க் கிழமை, திருப்பூர், கருமாராம்பாளையத்தில் உள்ள அரசுப் பள்ளியான மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், "ஓவிய கண்காட்சி" வெகு சிறப்பான முறையில் நடைபெற்றது.

 இக்கண்காட்சியில் பென்சில் ஓவியம் முதலாக பற்பல வண்ணங்கள் மூலம் வரையப்பட்ட இயற்கை காட்சிகள், கார்ட்டூன் படங்கள், மலர்கள், பழங்கள், விலங்குகள், பிற உயிரினங்கள்  மற்றும் மனித ஓவியங்கள் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் இடம்பெற்றிருந்தது. தேவையற்ற பொருள்களின் மூலம்  வடிவமைக்கப்பட்ட சிறு வகையிலான கைவினைப் பொருட்களும் இடம் பெற்றது புதிய சிந்தனையைத் தூண்டும் விதத்தில் அமைந்தது.

   இதில் 6,7 மற்றும் 8ம் வகுப்புகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் பங்கு கொண்டு தங்களது படைப்புத் திறமையை வெளிப்படுத்தினர்.

 பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி. N. உமா சாந்தி அவர்கள் இந்த அரிய நிகழ்ச்சி சிறந்த முறையில் நடைபெறுவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.

 இப்பள்ளியில் பகுதி நேர ஓவிய  ஆசிரியராகப் பணிபுரியும் திரு. பொன். சங்கர் அவர்கள் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியரது கற்பனைத் திறனையும், படைப்பாற்றல் மற்றும் ஓவியத் திறனையும் வெளிக்கொணரும் விதமாக மாணவ மாணவியருக்கு சிறந்த முறையில் பயிற்சியளித்து இக்கண்கவர் நிகழ்வினை  தொகுத்து வழங்கி உள்ளார்.

 மேலும், இப்பள்ளியில் பயிலும் பிற மாணவ மாணவியர், ஆசிரிய ஆசிரியைகள், மற்ற ஊழியர்கள் மற்றும் பெற்றோர் ஆகியோரும் ஓவியக் கண்காட்சியை ஆர்வத்துடனும், மகிழ்வுடன் கண்டு களித்துப் பாராட்டி சென்றனர்.

பிற ஆசிரிய ஆசிரியைகள், மாணவ கண்மணிகள் மற்ற அனைவரும் இந்நிகழ்வு சிறப்புடன் நடைபெறுவதற்கு பல வகைகளிலும் பேருதவி புரிந்துள்ளனர்.

 இது போன்ற கலைத்திறனை ஊக்குவிக்கும் நிகழ்ச்சியினால், மாணவர்களது படிப்புத் திறன் தவிர்த்துப் பிற திறமைகளையும் வளர்த்தெடுக்கும் விதமாக அமைவதுடன் மனதிற்கு புத்துணர்ச்சியையும் ஏற்படுத்துகிறது.

 இதனைக் கருத்தில் கொண்டே, தமிழ்நாடு அரசும் அரசுப் பள்ளிகளில் இது போன்ற கலைத்திறமைகளை வளர்த்தெடுக்கும் பாடங்களை கட்டாயமாக்கியுள்ளது.

 இது போன்ற நிகழ்ச்சிகளை முன்னெடுத்து, மற்றப் பள்ளிகளையும் ஊக்குவிக்கும் விதமாக, முன்மாதிரியாகத் திகழ்வதால் அரசு பள்ளியாக இப்பள்ளி பெருமிதம்  கொள்கிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி