முதுமலையில் எடுக்கப்பட்ட ஆவணப்படத்திற்கு ஆஸ்கர் விருது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 13, 2023

முதுமலையில் எடுக்கப்பட்ட ஆவணப்படத்திற்கு ஆஸ்கர் விருது

 

தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் எனும் இந்திய ஆவணப்படம் ஆஸ்கர் விருதை வென்று சாதனை படைத்துள்ளது.


முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் தாயை பிரிந்த நிலையில் பொம்மி, ரகு ஆகிய இரண்டு குட்டி யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. 


பிறந்து ஒரு சில மாதங்கள் மட்டுமே ஆன நிலையில் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு கொண்டுவரப்பட்ட இந்த யானைக்குட்டிகளை பராமரித்து வளர்த்தவர்கள் அங்கு யானை பாகனாக பணியாற்றும் பொம்மன் மற்றும் அவரது மனைவி பெள்ளி. 


அவர்கள் இந்த யானை குட்டிகளை எவ்வாறு வளர்த்தார்கள் என்பது குறித்த ஆங்கில ஆவணப்படம் ஒன்று கடந்த 2019 ஆம் ஆண்டு தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் என்ற பெயரில் எடுத்து வெளியிடப்பட்டது. 


இந்த ஆவணப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. 


இந்நிலையில்,  அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில், இந்த ஆண்டுக்கான திரையுலகின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கும் விழா திங்கள்கிழமை காலை தொடங்கியது. 


இதில், ஆஸ்கர் திரைப்பட விருதுக்கு இந்தியாவின் "தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்" படம் ஆவணப்படமும் போட்டியிட்டது.


இந்நிலையில், சிறந்த ஆவணக் குறும்படத்திற்கான "தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்" ஆஸ்கர் வென்று சாதனை படைத்துள்ளது.


முதுமலையில் யானைகளை பராமரிக்கும் பொம்மன், பெள்ளி தம்பதி குறித்த இந்த ஆவணப்படத்தை இயக்கிய கார்த்திகி, தயாரித்த குனீத் மோங்க விருதை பெற்றனர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி