அரசு மாதிரி பள்ளிகளில், மாணவர்களின் திறன் அடிப்படையில் சேர்க்கை - பள்ளிக் கல்வி துறை அமைச்சர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 9, 2023

அரசு மாதிரி பள்ளிகளில், மாணவர்களின் திறன் அடிப்படையில் சேர்க்கை - பள்ளிக் கல்வி துறை அமைச்சர்

 

'அரசு மாதிரி பள்ளிகளில், மாணவர்களின் திறன் அடிப்படையில் சேர்க்கை நடத்தப்படும்,'' என, பள்ளிக் கல்வி துறை அமைச்சர் மகேஷ் கூறினார்.


பள்ளிக் கல்வி துறை சார்பில், சிறார் திரைப்பட விழா, சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலக அரங்கில், நடந்தது.


அமைச்சர் மகேஷ் தலைமையில் நடந்த விழாவில், பள்ளிக் கல்வி முதன்மை செயலர் காகர்லா உஷா முன்னிலை வகித்தார். கமிஷனர் நந்தகுமார் வரவேற்புரை ஆற்றினார். தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி நன்றி தெரிவித்தார்.


அரசு பள்ளிகளில் திரையிடப்பட்ட ஏழு சிறார் திரைப்படங்களை பார்த்து, சிறந்த பின்னுாட்டம் அளித்த, 150 மாணவர்கள், குறும்பட போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


குறும்பட போட்டியில் தேர்வு செய்யப்படும், 25 மாணவர்கள் அமெரிக்காவுக்கு சுற்றுலா அழைத்து செல்லப்பட உள்ளனர்.


அமைச்சர் மகேஷ் அளித்த பேட்டி:


ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான, மாணவர்களின் கலை திறனை வளர்க்கும் வகையில், சிறார்களுக்கான குறும்பட போட்டி நடத்தப்படுகிறது.


அரசின் மாதிரி மேல்நிலை பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1ல் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். அரசு பள்ளிகளில் அனைத்து வகை செயல்பாடுகளிலும் சிறந்து விளங்கும் மாணவர்கள், திறன் அடிப்படையில், மாதிரி பள்ளிகளுக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.


இதற்காக ஆர்வமும் விருப்பமும் திறன் மேம்பாடும் உள்ள மாணவர்களிடம், அடிப்படை ஆய்வு நடத்தி, அதில் முன்னிலையில் இருப்பவர்களுக்கு, மாதிரி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வழங்கப்படும்.


இதை நுழைவு தேர்வு என எடுக்க கூடாது. இது ஒரு சோதனை அடிப்படையிலான திட்டம். இந்த ஆட்சியிலேயே அனைத்து அரசு பள்ளிகளும், மாதிரி பள்ளிகளாக மாற்றப்பட வாய்ப்புள்ளது.


இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி