ஆசிரியர் சமுதாயம் எப்போது ஒன்றுபடும்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 22, 2023

ஆசிரியர் சமுதாயம் எப்போது ஒன்றுபடும்?

பள்ளியில் சென்று ஆசிரியர்களை தாக்கியது போல் ஒரு காவல்நிலையத்தில் சென்று காவலர்களையோ அல்லது நீதிமன்றத்தில் சென்று நீதிபதிகளையோ வழக்குறைஞர்களையோ அல்லது மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களையோ, அல்லது ஒரு செய்தி சேனலின் செய்தியாளரையோ தாக்கியிருந்தால் இந்நேரம் தமிழ்நாடு முழுவதும் அந்த சம்பவம் வேறுமாதிரி கையாளப்பட்டிருக்கும்..


ஆனால் ஆசிரியர் சமூகம் தானே அதனால் தான் என்னவோ செய்திதாள்களில் கடைசி பக்கத்தில் வரும் முக்கிய செய்தி போல கேட்பார் அற்ற நாதியற்ற சமூகம் போல் ஆசிரியர் சமுதாயம் ஆகிவிட்டது..


அன்று தனியார் பள்ளியில் ஒருமாணவன் ஆசிரியர் ஒருவரை கத்தியால் குத்தியபோதே ஒட்டுமொத்தமாக போராடி பணிப்பாதுகாப்பு சட்டம் இயற்ற போராடியிருந்தால் இந்நேரம் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெற்றிருக்காது.


இங்கு எல்லாமே யாரோ ஒருவருக்குத்தான் நமக்கில்லை என்று கடந்து போகும் மனநிலைதானே எல்லோருக்கும் உள்ளது. போராட்டமாகட்டும் அல்லது கோரிக்கைகள் ஆகட்டும் நமக்கில்லை என்ற மனநிலையில் தான் எல்லோரும் கடந்து செல்கிறோம்.


ஆனால் ஒன்றை மட்டும் எண்ணிக்கொள்வோம் இன்று அப்பள்ளியில் நடைபெற்றது நாளை தமிழகம் முழுவதும் நடைபெறும் நாள் வெகு தொலைவில் இல்லை.


இனியாவது வகுப்பறையில் வாய்மூடி மவுனம் காக்காமல் ஒவ்வொன்றிற்கும் எதிர்த்து குரல்கொடுப்போம், கற்பித்தல் பணியை செய்ய வந்தவர்களை டேட்டா எண்ட்ரி ஆப்ரேட்டர்களாக மாற்றிய போதே கேட்க துணிவில்லாமல் இருந்தோம், இனியாவது ஒற்றுமையை கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள் ஒற்றுமையாக இருப்போம்.


இதுவே முற்றுப்புள்ளியாக இருக்கும் வகையில் அனைத்து இயக்கங்களுக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் அழுத்தம் கொடுப்போம்..


- அரசு பள்ளி ஆசிரியரின் பதிவு

5 comments:

 1. February la 30 days kuda vara chance iruku future la. But nenga othumaiya irukka vaaipae ila..

  ReplyDelete
 2. ஒன்றுபடாது. ஏற்கனவே பல சங்கங்கள்.
  தற்போது Employment -TRB -TET என ஆசிரியர்களை பிரிக்க ஒரு கூட்டம் முயற்சிக்கிறது. ஒரு சிலரின் சுயநலத்திற்காக அனைவருக்கும் கேடு தான்.

  ReplyDelete
  Replies
  1. என்ன சார் employment-Trb- Tet புரியல

   Delete
 3. 1008 சங்கங்கள் இருந்தால் உறுப்படும்.‌.

  ReplyDelete
 4. அனைத்தும் கட்சி சங்கம்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி