பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் டிபிஐ வளாகத்தில் ஆர்ப்பாட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 7, 2023

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் டிபிஐ வளாகத்தில் ஆர்ப்பாட்டம்

 

பணி நிரந்தரம் செய்யக் கோரி சென்னை டிபிஐ வளாகத்தில் பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தமிழகம் முழுவதும் அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் (தையல், ஓவியம், உடற்கல்வி, கணினி) பணியாற்றி வருகின்றனர். வாரத்தில் 3 நாட்கள் (தினம் அரைநாள்) பணியாற்றும் அவர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம்தொகுப்பூதியமாக வழங்கப்படுகிறது.


கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் அவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி தொடர்ந்து போராடி வருகின்றனர். சென்னையில் கல்வித் துறைஅலுவலகங்கள் அமைந்துள்ள டிபிஐ வளாகத்தில் தனியாகவும், குடும்பத்தினரோடும் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


தேர்தல் அறிக்கையில் உறுதி: இந்நிலையில், தமிழ்நாடு பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் மாநிலத் தலைவர் கீதா தலைமையில் 300-க்கும் மேற்பட்ட பகுதிநேர சிறப்புஆசிரியர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் நேற்று கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திமுக தனது தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்தவாறு, பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், போராட்டம் தொடரும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி