“அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எவ்வளவு ஊதியம் கொடுத்தாலும் தகும்” ஆளுநருக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பதில் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 21, 2023

“அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எவ்வளவு ஊதியம் கொடுத்தாலும் தகும்” ஆளுநருக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பதில்

 

அரசுப் பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர்கள் அதிக சம்பளம் பெறுகிறார்கள் என ஆளுநர் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், “அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு எவ்வளவு ஊதியம் கொடுத்தாலும் தகும்?” என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.


நேற்று முன்தினம் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.


அப்போது மேடையில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, “நாளுக்கு நாள் அரசாங்க கல்விக்கூடங்கள் கீழே சென்று கொண்டிருக்கிறன. சிஎஸ்ஐ அறிக்கையில் கூறுவது என்னவென்றால், 73 சதவீத உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தனியார் பள்ளிகளை நோக்கிச் செல்கிறார்கள். 27 சதவீத மாணவர்கள் தான் அரசுப் பள்ளிகளுக்குச் செல்கிறார்கள். ஆனால், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் நல்ல சம்பளம் பெறுகிறார்கள்” என கூறினார். இந்த கருத்து அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.


இந்நிலையில் ஆளுநரின் கருத்துக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலளித்துள்ளார்.


அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ‘வானவில் மன்ற திட்டத்தின்’ கீழ் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பயிற்சி நேற்று பிர்லா கோளரங்கத்தில் நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “இன்று (நேற்று) தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட், தமிழகம் மற்றும் தமிழர் நலன் சார்ந்த பட்ஜெட். இந்த பட்ஜெட்டில் முதல் முறையாக பள்ளிக்கல்வித்துறைக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை இத்துறையில் முன்னெடுக்க முடியும்.


பட்ஜெட்டில் பிற துறை சார்ந்த பள்ளிகளையும் பள்ளிக்கல்வித்துறையோடு இணைத்து இருக்கின்றனர். கல்வி அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே பள்ளிக்கல்வித்துறையோடு ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் உள்ளிட்ட பிற பள்ளிகள் பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்கப்பட்டுள்ளது.


ஆசிரியர்களுக்கு எவ்வளவு ஊதியம் கொடுத்தாலும் தகும் என்ற கருத்தை நான் கொண்டுள்ளேன். ஆளுநரும் மாணவராக இருந்து வந்தவர் தான். ஆசிரியர்களுக்கு அதிக ஊதியம் என்று அவரது கருத்து வேதனையை அளிக்கிறது.” என்றார்.

11 comments:

 1. பிறகு ஏன் தற்காலிக ஆசிரியர்களுக்கு 12000, 15000 மற்றும் 18000.

  ReplyDelete
 2. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் அதிகம்தான்.

  ReplyDelete
  Replies
  1. சகோதரா ஆசிரியர்களின் வேலை என்பது நாளுக்கு நாள் மன அழுத்தத்தை அதிகப்படுத்தும் வேலை. பிற அரசுத்துறையில் உள்ள வட்டாச்சியர், பத்திரப்பதிவு அலுவலர், வருவாய் அலுவலர்,RTO அலுவலர் போன்றவர்களும் எங்களைப் போன்று சமமனா சம்பளம் வாங்குகிறார்கள்.அவர்களை பொதுமக்கள் மதிக்கிறார்கள் அவர்கள் கேட்பதை கொடுக்கிறார்கள்.நாங்கள் கேட்டு போராடுவது உரிமைக்காக மட்டுமே. ஏதோ வயது முதிர்ந்த காலத்தில் குறைந்த பட்ச ஓய்வூதிம்.ஏற்கனவே இருந்த பல உரிமைகளை அரசு பறித்துக் கொண்டு விட்டது அதற்கான தான் போராடுகிறோம்.

   Delete
 3. 7500 என்பது மிக அதிகம்.. 2500 கூட அதிகம் தான்.. மாதம் 300 தான் சரி.

  ReplyDelete
 4. தமிழ் மக்களே உங்களை சுற்றி ஒரு மாய வலையை நீங்களே பின்னிக்கொள்கிரீர்கள்.ஆசிரியரை பார்த்து பொறாமை பட்டபொதுமக்களுக்கும் ஆசிரியரை மதிக்காத மாணவர்களுக்கும் ,சமுதாயத்திற்கும் காலம் மிகச்சிறந்த பாடங்களை தரும்

  ReplyDelete
 5. பெற்றோரை மதிக்காத மகன்,காவல்துறையை மதிக்காத பொதுமக்கள்,நாட்டிலே நடக்கும் கொலை கொள்ளை இவை அனைத்திற்கும் வகுப்பறையில் ஒரு ஆசிரியரை மதிக்காத ஒரு மாணவன் மட்டுமே காரணம்

  ReplyDelete
 6. முதல்வர் மு.க ஸ்டாலின் ஐயா தேர்தல் வாக்குறுதியில் கூறியதுப்போல் மன்றாடி கேட்டுக் கொள்ளும் ஒரே வேண்டுக்கோள் பகுதி நேர ஆசிரியரான எங்களை "பணிநிரந்தரம்" செய்து அரசு ஆணை வழங்க வேண்டும் இல்லை என்றாள் 10,000 ரூபாய் வாங்கும் எங்களுக்கு ஊதியம் உயர்வாவது செய்ய வேண்டும் கொஞ்சமாவது மனசாட்சியோடு முதல்வர் கல்வி அமைச்சருக்கு ஆணை இட்டு செய்ய சொல்லுங்கள் "தெய்வங்கள்" இருக்கிறார்கள் 😭😭😭😭

  ReplyDelete
 7. எந்த பாடத்திட்டத்தை கொடுத்தால் மாணவர்கள் ஒழுக்கமாகவும் இருப்பார்கள் என்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் அந்த மாதிரி பாடத்திட்டத்தை அமல்படுத்த மாட்டார்கள் இதுதான் இந்த நாட்டின் சபகேடு

  ReplyDelete
 8. ஆசிரியர் ஊதியத்தை மிகை படுத்தி பேசும் உங்களால்.. இதர துறை அலுவலர்கள் பெரும் ஊதியத்தை பேச பயப்படுவது என்??

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி