School Morning Prayer Activities - 28.03.2023 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 28, 2023

School Morning Prayer Activities - 28.03.2023

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 28.03.2023

திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: அழுக்காறாமை

குறள் எண் : 163
அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணா தழுக்கறுப் பான்.

பொருள் :
அறநெறியையும், ஆக்கத்தையும் விரும்பிப் போற்றாதவன்தான், பிறர் பெருமையைப் போற்றாமல் பொறாமைக் களஞ்சியமாக விளங்குவான்


பழமொழி :
There are more ways to the wood than one
ஒரு ஊருக்குப் போகப் பல வழி உண்டு.


இரண்டொழுக்க பண்புகள் :

1. என் வாழ்வில் எப்போதும் நேர்மையான முறையில் காரியங்கள் செய்ய முயல்வேன்.

2. என் நண்பர்கள் நேர்மையற்ற காரியங்கள் செய்ய அழைத்தால் நிச்சயம் துணை போக மாட்டேன்


பொன்மொழி :

உலகிலேயே மிகப் பெரிய சுமையாக விளங்குவது மூட நம்பிக்கைதான்.


பொது அறிவு :

1. எந்த நாள் உலக சுற்றுலா தினமாக கொண்டாடப்படுகிறது ? 

 செப்டம்பர் 7. 

 2. புகையிலை எதிர்ப்பு நாள் எது? 

 மே 31.


English words & meanings :

 kimono - 👘 Japanese dress with wide sleeves and broad sash at the waist. noun. ஜப்பானிய ஆடை. பெயர்ச் சொல்


ஆரோக்ய வாழ்வு :

மீன் வகைகளில் இருந்து வைட்டமின் பி12 அதிக அளவில் பெற முடியும். மத்தி, டூனா, சால்மன் உள்ளிட்ட மீன் வகைகளில் வைட்டமின் பி12 அதிக அளவில் இருக்கிறது.

மேலும் இதிலுள்ள புரதங்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், பாஸ்பரஸ், செலீனியம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி3 ஆகிய ஊட்டச்சத்துக்களையும் சேர்த்து பெற முடியும்.


கணினி யுகம்

Alt + Esc

Cycle through items in the order in which they were opened.

Alt + underlined letter

Perform the command for that letter.



மார்ச் 28 இன்று

மாக்சிம் கார்க்கி  


மாக்சிம் கார்க்கி (Maxim Gorky) என அறியப்படும் அலெக்சி மாக்சிகொவிச் பெசுகோவ் (உருசியம்: Алексе́й Макси́мович Пешко́в; 28 மார்ச் [யூ.நா. 16 மார்ச்] 1868 – 18 சூன் 1936) உருசியா நாட்டை சேர்ந்த பிரபல எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதி.[1] இவர் உலகின் மிகச் சிறந்த புதினங்களில் ஒன்றாகக் கருதப்படும் தாய் என்ற புதினத்தை எழுதினார்.

எந்நேரமும் குறிப்பேடு வைத்திருப்பார். தனக்குத் தோன்றுவதை அதில் எழுதுவார். 1892-ல் இவரது முதல் சிறுகதையான ‘மகர் சுத்ரா’ (Makar Chudra) வெளிவந்தது. மாக்சிம் கார்க்கி என்ற பெயரில் தொடர்ந்து எழுதிவந்தார். கார்க்கி என்ற சொல்லுக்கு கசப்பு என்பது பொருள்[4]

1898-ல் ‘ஸ்கெட்சஸ் அண்ட் ஸ்டோரீஸ்’ வெளிவந்தது. 1899-ல் முதல் நாவலும், 1902-ல் ‘தி லோயர் டெப்த்ஸ்’ என்ற நாடகமும் வெளிவந்தன. இவரது உலகப் புகழ்பெற்ற ‘மதர்’ (தாய்) புதினம் 1906-ல் வெளிவந்தது. 1906ஆம் ஆண்டு டிசம்பரில் நியூயார்க்கிலிருந்து வெளியாகும் 'ஆப்பிள்டன்' இதழில் தாய் முதற்பகுதியின் முன்பாகமும் 1907ஆம் ஆண்டு தாய் முழுவதும் வெளிவந்தன. இந்நூல் முதலில் வெளிவந்தது அமெரிக்காவில்தான். கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக மக்களைக் கிளர்ந்தெழச் செய்வது, அதிகார வர்க்கத்துக்கு எச்சரிக்கை விடுப்பது, வீரம் ஆகியவை இவரது எழுத்துகளின் அடிநாதமாகத் திகழ்ந்தன. இதனால் அரசின் கோபத்துக்கு ஆளானார். பலமுறை கைது செய்யப்பட்டார். இவரது படைப்புகள் கடும் தணிக்கையை எதிர்கொண்டன.

பல கவிதைகள் எழுதினார். ஏராளமான நூல்களைப் படித்தார். அபார நினைவாற்றல் படைத்தவர். எழுதுவதற்கு பென்சில்களையே பயன்படுத்தினார். சிறிய சிற்பங்கள் மீது அலாதி பிரியம் கொண்டவர்.

பாட்டாளி வர்க்க இலக்கியத்தின் பிதாமகர் என்று போற்றப்பட்டார். இவர் படைத்த தாய் (புதினம்) ’ (மதர்) நாவல், இன்றுவரை புரட்சிகரத் தொழிலாளி வர்க்கத்துக்கு ஊக்கமும் உற்சாகமும் தந்து வீரத்தை ஊட்டிவருகிறது. இது 200 முறைக்கு மேல் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.



நீதிக்கதை


கடலோரப் பகுதி கிராமமான நல்லூரில் வசித்து வந்த இரத்தினசாமி என்ற எளிய விவசாயிக்கு சொந்தமாக இருந்தது இரண்டு ஏக்கர் நிலம் மட்டுமே. அவருக்கு மாணிக்கம், முத்து என்ற இரு மகன்கள் இருந்தனர். இருவரும் பள்ளிப் படிப்பை முடித்தனர். 

இரத்தினசாமி தனது வறுமையின் காரணமாக மகன்கள் இருவரையும் அழைத்து, நீங்கள் உங்கள் கல்வியை இத்துடன் முடித்துக் கொண்டு என்னைப்போல் விவசாயத்தில் ஈடுபடுகிறீர்களா? என்று கேட்டார். 



கல்வியில் பெரிதும் நாட்டம் கொண்டிருந்த மாணிக்கம், அப்பா, நான் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படித்து, எனக்கு ஒரு வளமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள விரும்புகிறேன் என்றான். இளையவன் முத்து, எனக்கு படிப்பில் நாட்டமில்லை. விவசாயம் செய்யவும் விருப்பமில்லை. நான் வியாபாரம் செய்ய விரும்புகிறேன் என்றான். 



இருவருக்குமே, விவசாயத்தில் நாட்டம் இல்லாததால், இரத்தினசாமி தன் நிலத்தை விற்று, கிடைத்த தொகையை இருவருக்கும் சமமாகப் பங்கிட்டு அளித்தார். மாணிக்கம் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து செவ்வனே பயின்று தேறி, நல்லதொரு வேலையில் அமர்ந்தான். முத்து தனக்குக் கிடைத்த தொகையை வியாபாரத்தில் முதலீடு செய்து வியாபாரம் தொடங்கினான். 



ஆனால், சில ஆண்டுகளில் வியாபாரத்தில் பெருத்த நட்டம் ஏற்பட்டு முதலீடு செய்த தொகையை முற்றிலும் இழந்து நின்றான். மனமுடைந்து பரிதாபமாக நின்ற முத்துவை நோக்கி மாணிக்கம், தம்பி கல்வி ஒன்றே அழிவற்ற செல்வம். நான் பெற்றுள்ள கல்வி எனும் செல்வத்தினால்தான், எனக்கு நிரந்தர வருமானம் தரக்கூடிய வேலை கிடைத்தது. 



ஒருவன் பெற்றுள்ள கல்வி எனும் செல்வம் காலத்தால் அழியாதது. அதை யாரும் திருடிச் செல்ல முடியாது. அதை யாராலும் சேதமாக்கவும் முடியாது. ஆனால் பணம் அவ்வாறு அல்ல, பணம் எனும் செல்வம் நிலையற்றது என்று கல்வியின் பெருமையை உணர்த்தினார். 



நீதி :


கல்வி யாராலும் அழிக்க முடியாத செல்வம்.

இன்றைய செய்திகள் - 28.03. 2023

* 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு பாடங்களில் நூற்றுக்கு நூறு (சென்டம்) மதிப்பெண் வாங்கினால் ரூ.10,000 பரிசு உள்ளிட்ட 27 அறிவிப்புகளுடன் சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

* கரோனா தொற்று பாதிப்புக்கு பிறகுசர்க்கரை நோய், ஞாபக மறதி,சுவாச கோளாறு உள்ளிட்ட பிரச்சினைகள் பொதுமக்களிடையே அதிகரித்துள்ளதாக அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

* தமிழகத்தில் 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

* டெபுடேஷனில் வெளிநாடுகளுக்கு சென்று பணியாற்றும் அதிகாரிகள் குறிப்பிட்ட காலத்தை தாண்டியும் அங்கு தங்கியிருந்தால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.

* இலங்கை அதிபருடன் இந்திய குழு சந்திப்பு: எரிசக்தித் துறை மேம்பாடு குறித்து கலந்துரையாடல்.

* பெலாரஸில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்தப்போவதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளது உலக நாடுகளிடயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் தொடர்: இந்தியாவின் சாத்விக்-சிராக் ஷெட்டி ஜோடி 'சாம்பியன்'.

* உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்திய வீராங்கனை சிப்ட் கவுர் சம்ரா வெண்கலம் வென்றார்.

* சென்னையில் ஐ.பி.எஸ். அணிக்கு எதிரான கால்பந்து போட்டி: 3-1 என்ற கோல் கணக்கில் ஐ.ஏ.எஸ். அணி வெற்றி.

Today's Headlines

* Education sector has been given a lot of importance in the Chennai Corporation Budget with 27 announcements including a Rs.10,000 prize for getting a hundred out of 100 (centum) marks in Class 12 general examination subjects.

 * Doctors at Apollo Hospital have said that after the corona virus, problems like diabetes, memory loss and respiratory disorders have increased among the public.

 * Tamil Nadu likely to receive rain at one or two places for 4 days: Chennai Meteorological Department Information.

 * The central government has warned that disciplinary action will be taken against officers who are working abroad on deputation and stay there beyond the specified period.

*  Indian delegation meets Sri Lankan President: Discusses energy sector development.

*  Russian President Putin's announcement that he will deploy nuclear weapons in Belarus has caused a stir in the world.

* Swiss Open Badminton Series: India's Chadwick-Chirag Shetty pair got 'Championship'

 * World Cup Shooting: India's Shipt Kaur Samra won the bronze.

 * In Chennai  Football Match IAS  Team won the  IPS team won by 3-1.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

1 comment:

  1. இந்த ஆட்சியில் நிதி அமைச்சர் சட்டப் பேரவையில் அறிவித்த சிறப்பான விசயம், தற்காலிக ஊழியர்கள் பெறக்கூடிய சம்பளம் ஓரளவு நல்ல சம்பளம் என்று இருக்க வேண்டும் என்று மனிதாபிமான அடிப்படையில் அறிவித்தார். கடந்த ஆட்சியில் அடிமாட்டு விலை என்று சொல்லக்கூடிய குறைந்த பட்ச சம்பளம் கொடுத்து பல்லாயிரக்கணக்கான படித்தவர்கள் குடும்பம் நடத்த முடியாமல் தவித்துக் கொண்டிருந்த நிலையில் இந்த அறிவிப்பு சிறப்பான அறிவிப்பு. இன்னும் தொகுப்பு ஊதியம் என்பதை ஒழித்து விட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி