2012 ம் ஆண்டு தகுதி தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற பணி நியமனத்துக்கான ஆசிரியர்களுக்கு தேர்வு அறிவிப்பு மே மாதம் வெளியாகும் பள்ளி கல்வி ஆணையர் அறிவிப்பு
தமிழக பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் கூறியதாவது : ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தாள் -2 ல் , 15 ஆயிரத்து 297 பேர்மட் டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர் . அதைத் தொடர்ந்து தாள் -1 ல் , 1 லட்சத்து 53 ஆயிரத்து 533 பேர் பங் கேற்றனர் . அதில் 21 ஆயி ரத்து 543 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த 2012 ம் ஆண்டு முதல் முதலாக தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற சுமார் 1 லட்சம் பேர் ஆசிரியர் பணிக்காக காத்திருக்கின்றனர். அவர்களின் பணி நியமனத்துக்குரிய போட்டித் தேர்வுகள் நடத்த அரசாணை ( எண் 149 ) பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் தயாராகி வருகிறது. இந்த போட்டித் தேர்வுக்கான அறிவிப்பு மே மாதத்துக்குள் வெளியிடப்படும். அதற்கு பிறகு தேர்வு நடத்தப்படும்.
ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வில் கூறிய பாடத்திட்டங்கள் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தனித் தனியாக வெளியிடப்படும். இடை நிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் சுமார் 10 ஆயிரம் காலி இடங்கள் உள்ளன.
இது தவிர , வட்டாரக் கல்வி அலுவலர் , கல்லூரி உதவிப் பேராசிரியர் , பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுகள் நடத்துவதற்கான அறிவிப்பும் மே மாதம் வெளியிடப்படும் . இவ்வாறு பள்ளிக் கல்வி ஆணையர் நந்தகு மார் தெரிவித்தார்.
Age eppadi
ReplyDeleteDMK சொல்றது ஒன்னு செய்றது வேற ஒன்னு
ReplyDeleteஅய்யா சொன்னா சரியா இருக்கும். நியமன தேர்வு உண்டு, so பொய் சொல்லி ஆட்சியை பிடிச்ச திமுக.வ பார்லிமென்ட் எலெக்ஷன்ல ஒழிச்சு கட்ட வழி பாருங்க 😄
ReplyDeleteஇன்னும் எத்தனை முறை தாண்டா தேர்வு எழுதி எழுதி சாவது!
ReplyDeleteஇதுக்கு அதிமுக ஆட்சியே பரவாயில்லை. பகுதி நேர ஆசிரியர்கள் தவிக்கிறார்கள். தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வாழ்க்கை வீணாகிவிட்டது. மீண்டும் தேர்வு. விடியல் தாருங்கள் என்று கேட்டு விடியாமலே போய் விட்டது.
ReplyDeleteTRB TGT Chemistry Classes going at Nagercoil contact.9884678645
ReplyDeleteதிருமா, வீரமணி,இவர்களை காணாமல் போன பட்டியலில் சேர்க்க வேண்டும் திமுக கலைஞரோடு காணாமல் போனது இது சமூக நீதி என்றால் அதை சாக்கடையில் எறியுங்கள்
ReplyDelete