இந்தியாவிலேயே முதலிடம்; உலக அளவில் 13-ம் இடம்: மிளிரும் சென்னை இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 5, 2023

இந்தியாவிலேயே முதலிடம்; உலக அளவில் 13-ம் இடம்: மிளிரும் சென்னை இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட்


சென்னை தரமணியில் உள்ள இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி மற்றும் அப்ளைடு நியூட்ரிஷன் எனும் மத்திய அரசு நிறுவனம், 'விருந்தோம்பல் மற்றும் ஹோட்டல் மேலாண்மை கல்வி நிறுவனங்களில் இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளது; சர்வதேச அளவில் 13-வது இடம் பிடித்துள்ளது.


இது தொடர்பாக இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் நிர்வாகக் குழு தலைவரும், தமிழக அரசின் முதன்மைச் செயலருமான சந்திர மோகன் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம் வருமாறு: ''மத்திய அரசின் சுற்றுலாத் துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி கல்வி நிறுவனமான இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி மற்றும் அப்ளைடு நியூட்ரிஷன் நிறுவனம், 1963ல் இருந்து செயல்பட்டு வருகிறது. உலகத்தரத்திலான விருந்தோம்பல் கல்வியை வழங்குவதன் 60-ம் ஆண்டை இந்நிறுவனம் கொண்டாடி வருகிறது.


இந்நிறுவனத்தின் சார்பில் 3 வருட B.Sc. Hospitality and Hotel Administration படிப்பும், 2 வருட M.Sc. Hospitality Administration படிப்பும் வழங்கப்பட்டு வருகிறது. அதோடு, ஒன்றரை ஆண்டுகள் டிப்ளமோ படிப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இங்கு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் வளாக நேர்காணல்கள் வாயிலாக 100 சதவீத வேலைவாய்ப்பை இந்நிறுவனம் பெற்றுத் தருகிறது.


இந்நிலையில், இந்நிறுவனம் தர நிலையில் இந்திய அளவில் முதலிடத்தையும், சர்வதேச அளவில் 13-வது இடத்தையும் பெற்றுள்ளது. அமெரிக்காவின் CEOWORLD MAGAZINE இதனை தெரிவித்துள்ளது. தகுதி தேர்வு, தேர்வு பெற்றவர்களின் கருத்துக்கள், பணியாளர்களின் கருத்துகள், வேலைவாய்ப்பபை பெற்றுத் தரும் விகிதம், சர்வதேச நிறுவனங்களுடன் உள்ள தொடர்பு உள்பட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் விருந்தோம்பல் மற்றும் ஹோட்டல் மேலாண்மை கல்வி நிறுவனங்களை CEOWORLD MAGAZINE நிறுவனம் தர வரிசைப்படுத்தி உள்ளது.


அதன்படி, இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி மற்றும் அப்ளைடு நியூட்ரிஷன் நிறுவனம் இந்திய அளவில் முதலிடத்தையும், சர்வதேச அளவில் 13வது இடத்தையும் பிடித்துள்ளது. இதற்கு முன்பாக, இந்நிறுவனம் 2017ல் சர்வதேச அளவில் 34வது இடத்தையும், 2018ல் 28வது இடத்தையும், 2019ல் 24வது இடத்தையும், 2020ல் 22வது இடத்தையும், 2021ல் 18வது இடத்தையும், 2022ல் 14வது இடத்தையும் பிடித்தது. நிறுவனத்தின் தரம் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதை CEOWORLD MAGAZINE உறுதிப்படுத்தி இருக்கிறது. உலக அளவில் முதல் 15 இடங்களைப் பெற்றுள்ள ஒரே இந்திய நிறுவனமாக இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி மற்றும் அப்ளைடு நியூட்ரிஷன் நிறுவனம் விளங்குகிறது.


இந்நிறுவனத்தின் சேர்க்கை JEE நுழைவுத் தேர்வு மூலமாகவே நடைபெறுகிறது. இந்நிறுவனத்தில் சேர விரும்புபவர்கள் https://nchmjee.nta.nic.in என்ற இணையளத்தின் மூலம் விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.''

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி