கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த 6 மாதம் அவகாசம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 29, 2023

கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த 6 மாதம் அவகாசம்!

 

தமிழகம் முழுதும் உள்ள, 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு, தகுதியான உறுப்பினர்களை சேர்க்கும் வரை, தேர்தல் நடத்த தடை கோரி, ஈரோட்டை சேர்ந்த சண்முகம் என்பவர், பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.


வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, ''உறுப்பினர் பட்டியல் திருத்தும் பணி நடந்து வருகிறது,'' என்றார்.


கூட்டுறவு சங்கங்கள், தேர்தல் கமிஷன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சினேகா, ''குறைகளை நிவர்த்தி செய்ய, அரசு, ஆறு மாத காலம் அவகாசம் கேட்டுள்ளது; இதுகுறித்து, நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்கலாம்,'' என்றார்.


இதைப்பதிவு செய்த நீதிபதிகள், உறுப்பினர் பட்டியலை திருத்த, ஆறு மாத கால அவகாசம் வழங்கினர். அதன்பின் கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி