எண்ணும் எழுத்தும் ’ பயிற்சியின் போது ஆசிரியைகளை அவதுாறாக பேசிய BEO இடமாற்றம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 23, 2023

எண்ணும் எழுத்தும் ’ பயிற்சியின் போது ஆசிரியைகளை அவதுாறாக பேசிய BEO இடமாற்றம்.

 

அயோத்தியாப்பட்டணம் வட்டார கல்வி அலுவலர் , பெத்தநாயக்கன்பாளை யத்துக்கு இடமாற்றப்பட்டார். சேலம் மாவட்டத்தில் , அயோத்தியாப்பட்டணம் வட்டாரக் கல்வி அலுவலராக இருந்தவர் ஜெயலட்சுமி . இவர் , ' எண்ணும் எழுத்தும் ’ பயிற்சியின் போது ஆசிரியைகளை அவதுாறாக பேசியதாக தொடக்க கல்வி ஆசிரியர் மன்றம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. 


இதன்படி , மாவட்ட கல்வி அலுவலர் சந்தோஷ் விசாரித்து , அறிக்கையை தொடக்க கல்வி இயக்குனரகத்துக்கு அனுப்பினார். இதையடுத்து புகாருக்குள்ளான ஜெயலட்சுமி , பெத்த நாயக்கன்பாளையம் ஒன்றிய வட்டார கல்வி அலுவலராக நிர்வாக மாறுதல் செய்யப்பட்டார்.No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி