வெயில் கடுமையாக இருப்பதால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகுமா? - அன்பில் மகேஸ் பதில் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 22, 2023

வெயில் கடுமையாக இருப்பதால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகுமா? - அன்பில் மகேஸ் பதில்

வெயில் கடுமையாக இருப்பதால் பள்ளிகள் தாமதமாக திறப்பது குறித்து தற்போதே முடிவு ஏதும் செய்ய இயலாது என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி தெரிவித்துள்ளார்.


அரசு பள்ளிகளில் பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள் ஐஐடி உள்ளிட்ட மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் சேரும் வகையில் ஜேஇஇ நுழைவுத் தேர்வை எதிர்கொள்வதற்கான பயிற்சி திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ‘நான் முதல்வன்' திட்டத்தின் ஓர் அங்கமான இத்திட்டத்தின் தொடக்க விழா சென்னை சைதாப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது. இத்திட்டத்தை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.


பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் தான் இந்த பயிற்சி திட்டத்தை தொடங்கி யுள்ளோம். வரும் காலங்களில் அதிகப்படியான மாணவர்கள் ஜேஇஇ பயிற்சியில் சேருவார்கள் என எதிர்பார்க்கிறோம். தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பதற்கு காலதாமதம் ஏற்படுமா என்று கேட்கிறீர்கள்.


கோடை விடுமுறைமுடிந்து பள்ளி திறக்கும்போது வெயில் தாக்கத்தை வைத்து முடிவு செய்யலாம். நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிப்பதற்கான அனைத்து சட்டப் போராட்டங்களும் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

3 comments:

  1. அரசின் முடிவு எதுவோ அதுதான் நடக்கும்.

    ReplyDelete
  2. திமுக ஆட்சியில் அனைத்தும் சிறப்பாக இருக்கும் என்று நம்பி பல்வேறு நூதன பிரச்சாரம் செய்து மாற்றம் வேண்டும் என்று நினைத்த அனைவரும் இறங்கி வேலை பார்த்தோம். தகுதி தேர்வு எழுதி பின்னர் மீண்டும் நியமன தேர்வு வைக்க மாட்டேன் என்று கூறி வாக்குகள் சேகரித்த நம் முதல்வர் மீண்டும் அதே நியமனத்தேர்வு வைக்கிறார். 10 ஆண்டுகள் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பவில்லை. இப்போதும் நிரப்ப முயற்சி இல்லை. அனைவரும் விரக்தி அடைந்து உள்ளனர்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி