ஆதிதிராவிடர், பழங்குடியின பள்ளிகளை கல்வித் துறையோடு இணைக்க கூடாது: ஆசிரியர், காப்பாளர் சங்கம் - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Apr 9, 2023

ஆதிதிராவிடர், பழங்குடியின பள்ளிகளை கல்வித் துறையோடு இணைக்க கூடாது: ஆசிரியர், காப்பாளர் சங்கம்

 


தமிழ்நாடு ஆசிரியர், காப்பாளர் முன்னேற்ற சங்கத்தின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கபிலன் தலைமை தாங்கினார்.


மாவட்டத் தலைவர் சதீஷ்குமார், பொருளாளர் பாலசுந்தரம், மாநில பொதுச் செயலாளர் விவேக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது மாநில பொதுச் செயலாளர் விவேக் கூறியதாவது: ஆதிதிராவிடர் மற்றும் பழங்கு டியினர் நலத்துறை பள்ளிகள் உள்ளிட்ட இதர அரசுப் பள்ளிகள் அனைத்தும் பள்ளிக்கல்வித் துறையுடன் இணைக்கப்படுவதாக சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் அறிவித்திருக்கிறார்.


இந்த முயற்சியை அரசு கைவிட வேண்டும். இரண்டு துறைகளும் தனித்து இயங்குகிறபோதே இங்கு படிக்கும் மாணவர்களுக்கும், பணி செய்யக் கூடிய ஆசிரியர்களுக்கும் சமமான உரிமைகள் இதுவரை வழங்கப்படுவதில்லை. உதாரணமாக, மாணவர்க ளுக்கு வழங்கப்படும் இலவசங் கள், சிறப்பு வழிகாட்டி கையேடுகள் மற்றும் சீருடை போன்றவை கல்வித்துறையால் வழங்க அனுமதிக்கப்பட்டதிலிருந்து சரிவர வழங்கப்படாமல் மாற்று மனப்பான் மையோடு நடத்தப்படுகிறோம்.


இத்துறையில் காலிப் பணியி டங்கள் உரிய காலத்தில் நிரப்பப்படுவதில்லை. ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுகள் பல ஆண்டு காலமாக வழங்கப்படுவதில்லை. தனித் துறையாக இருந்து அதற்காக நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரிக ளும் எங்களுடைய குறைகளை கேட்காதபோது, கல்வித்துறை என்ற பெருங்கடலில் நாங்கள் கரைக்கப்பட்டால் எங்களின் நிலைமோசமாகிவிடும். எனவே அரசு இந்த முயற்சியை கைவிட்டு இந்த துறையை செம்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

2 comments:

  1. Hostal wardens கொள்ளை அடிப்பதற்கும், அதிகாரிகளின் தலை ஈடு இல்லாமல் பொழுதை போக்க வா சார்

    ReplyDelete
  2. பள்ளிக்கல்வி துறையில் நீங்கள் சொன்ன அனைத்தும் perfect ஆக நடக்கிறது...எனவே பள்ளி கல்வித்துறையில் இணைத்தால் மாணவர்களின் கல்வி தரம் மேம்படும் மேலும் ceo,deo நேரடியாக தவறு செய்யும் ஆசிரியர்கள் மேல் உடனடியாக ஆக்சன் எடுப்பார்கள்....என்பது என் பணிவான கருத்து

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி