‛ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை நெளிய விட்ட எம்.எல்.ஏ., - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Apr 8, 2023

‛ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை நெளிய விட்ட எம்.எல்.ஏ.,

 

அரசு ஊழியர்களின் தபால் ஓட்டுகள்தான் தி.மு.க., ஆட்சிக்கு காரணம்' என, மனுவுடன் வந்த ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை நெளிய வைத்தார் உசிலம்பட்டி எம்.எல்.ஏ., அய்யப்பன்.


அரசு ஊழியர், ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ நேற்று 234 தொகுதிகளிலும் மக்கள் பிரதிநிதிகள், அமைச்சர்களிடம் மனு கொடுத்து, தங்களுக்காக குரல் கொடுக்கும் படி கேட்டனர்.


மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதி பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அய்யப்பனிடம் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மனு கொடுத்தனர். அவர்களிடம் எம்.எல்.ஏ., கடந்த தேர்தலில் 43 தொகுதிகளில் அ.தி.மு.க., தோல்விக்கு காரணம் நீங்கள் அளித்த தபால் ஓட்டுகள்தான்.


43 தொகுதிகளில் கூடுதலாக நாங்கள் பெற்றிருந்தால் அ.தி.மு.க., ஆட்சி அமைந்திருக்கும். இருந்தாலும் உங்கள் கோரிக்கைகள் குறித்து வரும் கூட்டத் தொடரில் பேசுவேன்'' என உறுதி அளித்தார்.


ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நீதிராஜா, பொற்செல்வன், உசிலம்பட்டி ஒருங்கிணைப்பாளர்கள் ஸ்ரீரங்கநாதன், கார்த்திகேயன், மனோகரன், அய்யங்காளை, ஆசிரியர் சங்க நிர்வாகிகள் செந்தில்குமார், ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

5 comments:

 1. இந்த அரசு பணியாளர்கள் ஓட்டு தான் தமிழகத்தில் விடியல் வர காரணம் 😄😄

  ReplyDelete
 2. ஆட்சியில் இருந்த போது அது தெரியவில்லை. வாய்க்கு வந்தபடி திட்டினீர்கள்.

  ReplyDelete
 3. jai Modi sarkar welcome modiji🤔😬

  ReplyDelete
 4. கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் பாராளுமன்ற தேர்தலில் திமுகவுக்கும் இதே நிலை தான்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி