TET தேர்வு கட் -ஆப் மதிப்பெண்களில் தளர்வு: குளறுபடிகளுக்கு தீர்வு தருமா அரசு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 3, 2023

TET தேர்வு கட் -ஆப் மதிப்பெண்களில் தளர்வு: குளறுபடிகளுக்கு தீர்வு தருமா அரசு


'டெட் தேர்வில் நடந்த குளறுபடிகளால் தேர்ச்சி சதவீதம் குறைந்ததால் அதற்கு தீர்வாக கட் - ஆப் மதிப்பெண் நிர்ணயிக்க வேண்டும்' என கோரிக்கை எழுந்துள்ளது.


பிப். 3ம் தேதி முதல் 15ம் தேதி வரை டெட் 2ம் தாள் தேர்வு ஆன்லைன் வாயிலாக நடந்தது. 2.54 லட்சம் பேர் தேர்வெழுதி 15 ஆயிரத்து 430 பேர் அதாவது 6 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.

காரணம் என்ன


தேர்ச்சி குறைந்ததற்கு வினாத்தாள் வடிவமைப்பு பாட வாரியாக மதிப்பெண் நிர்ணயித்ததில் குளறுபடி உள்ளிட்டவையே காரணம் என தேர்வர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


டெட் தேர்வர்கள் சிலர் கூறியதாவது: ஆந்திரா கர்நாடகா அசாம் போன்ற மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 40; எஸ்.சி. - எஸ்.டி. 45; பி.சி. - எம்.பி.சி. 50 சதவீதம் கட்-ஆப் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


ஆனால் தமிழகத்தில் பொது 60; மற்ற பிரிவினர் 55 சதவீதம் கட்-ஆப் பெற வேண்டும். இதனால் ஓரிரு மதிப்பெண்ணில் தேர்ச்சி வாய்ப்பை இழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவ்வாறு கூறினர்.


குளறுபடிகள்


டெட் 2ம் தாள் முதன்முறையாக ஆன்லைனில் நடத்தப்பட்டது. இதில் சாதகங்களைப் போலவே பின்னடைவுகளும் ஏராளம். ஒரே பாடத்துக்கு வெவ்வேறு 'பேட்ஜ்'களில் வெவ்வேறு வினாத்தாள்கள் வழங்கப்பட்டன. இதில் ஒரு பேட்ஜுக்கு எளிது இதர பேட்ஜுக்கு கடினம் என சமவாய்ப்பு மறுக்கப்பட்டது.


ஒரே பாடத்தில் வெவ்வேறு வினாத்தாள்களுக்கு தவறான கேள்விக்கு நட்சத்திரக் குறியீடு வழங்கியதிலும் பாரபட்சங்கள் இருந்தன.


இதற்கு முன் டெட் தேர்ச்சி பெற்றால் ஆசிரியராக நியமிக்கப்படுவர். தற்போது நியமனத் தேர்வையும் எழுத வேண்டும் என்பதால் முன்பிருந்ததைப் போல 55 சதவீத மதிப்பெண் கட்-ஆப் கூடாது.


ஆந்திராவைப் பின்பற்றி குறைக்க வேண்டும். நியமனத் தேர்வில் கூடுதல் வாய்ப்பு அளித்து அதிலிருந்து தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என டெட் தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

11 comments:

 1. Atleast follow the normalisation formula to derive the TET 2 mark

  ReplyDelete
 2. எம்பிளாய்மென்ட் சீனியரிட்டி + டெட் தேர்வு மதிப்பெண் = வேலைவாய்ப்பு, அதிகாரிகள் கவனிப்பார்களா?!

  ReplyDelete
 3. இட ஒதுக்கீடு என்பதே கொடுக்க கூடாது அது என்ன ஒரு பிரிவுக்கு 45 % மற்றொரு பிரிவுக்கு 60%. இதனால் குறைந்த மதிப்பெண் எடுத்து சிலர் எளிதாக வேலையில் சேர்ந்து விடுகின்றனர். அதிக மதிப்பெண் எடுத்தாலும் சில பிரிவினர் வேலைக்கு போகவே முடியவில்லை.

  ReplyDelete
  Replies
  1. இட ஒதுக்கீடு ஏன், சமூக நீதி பற்றி தெரியாத தங்களை போன்றோர், அரசு ஆசிரியர் பணியில் சேராமல் இருப்பதே கல்வித்துறைக்கு நல்லது

   Delete
 4. இதற்கு மேல் தளர்வு மதிப்பெண் தர மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை

  ReplyDelete
 5. நான் உறுதி மொழி ஏற்கிறேன்!!
  வரும் நாடாளுமன்ற தேர்தலில் நான் கண்டிப்பாக திமுக விர்க்கு ஓட்டு போடுவேன் ...என் சொந்தபந்தங்கள்,நண்பர்கள்,உடன் பணிபுரிபவர் என எல்லாரையும் திமுக க்கு வாக்களிக்க சொல்வேன்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி