பதவி உயர்வு பெறுவதற்கு TET கட்டாயமில்லை - தொடக்கக் கல்வி இயக்குநர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 18, 2023

பதவி உயர்வு பெறுவதற்கு TET கட்டாயமில்லை - தொடக்கக் கல்வி இயக்குநர்

பதவி உயர்வு பெறுவதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயமில்லை.

வழக்கம் போல் பழைய நடைமுறைப்படி பதவி உயர்வு பெற தேர்ந்தோர் பட்டியல் ( Panel list ) தயார் செய்யலாம்.

அலுவலர்களுக்கான  GOOGLE  MEET இல் தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்கள் அறிவிப்பு.



 மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்கள் இன்று (18.04.2023),  மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை நடைபெற்ற மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்க கல்வி),  வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான இணையவழி   (Google meet) கூட்டத்தில் பதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியல் எப்போதும் தயாரிப்பது போல் அனைத்து நிலை ஆசிரியர்களையும் முறைப்படுத்தி விதிகளின்படி தயார் செய்யுங்கள்.  பட்டதாரி ஆசிரியர் பதவிஉயர்வு முன்னுரிமைப் பட்டியல் தயாரிக்கிற போது பணிமூப்பு விதிகளின்படி தயாரிக்க  வேண்டும்.  ஆசிரியர் தகுதி தேர்வு (TET) எவராவது தேர்ச்சி பெற்றிருந்தால் அவர் இடம்பெறும் வரிசைக்கு நேராக ஆசிரியர் தகுதித் தேர்வு (TET)   தேர்ச்சி பெற்றவர், என்று குறிப்பு எழுதினால் போதுமானது.

 நீதிமன்றத்தினுடைய மேல்முறையீடு தீர்ப்பு எப்படி வருகிறதோ?.. அதற்குப் பிறகு நாம் என்ன செய்ய வேண்டுமோ?.. அப்படி முறைப்படுத்தி  செய்து கொள்ளலாம்.   ஆகையால் எப்போதும் போல முன்னுரிமைப் பட்டியல் தயாரிக்க வேண்டும் என்று தெளிவுபடுத்தி இருக்கிறார்கள்.

 கூட்டத்தில் வட்டாரக் கல்வி அலுவலர் ஒருவர், பணி  நீட்டிப்பில் இருக்கும் ஆசிரியர்களை ஏப்ரல் 28ஆம் தேதி  விடுவித்திட வேண்டும் என்று  செயல்முறைகள் வந்து கொண்டுள்ளது. அவர்களை கல்வி ஆண்டு முடியும் வரை அனுமதிக்கலாமா?.. என்று இயக்குனர் அவர்களிடம் கேட்டதற்கு அனுமதிக்கலாம், என்று வாய்மொழியாக தெரிவித்துள்ளார்கள்.

24, 25, 26 ஆகிய தேதிகளில் ஆசிரியர்கள் எண்ணும் எழுத்தும் பயிற்சிக்கு செல்கின்ற போது அந்த வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை.  27, 28 ஆகிய தேதிகளில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரும்பொழுது அந்த வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும்.  என்று கூட்டத்தில்  தெரிவித்துள்ளார்கள்.


8 comments:

  1. Replies
    1. If govt need TET.... They they need to give proper notification and need to conduct exams... And then only to give promotions... Nee enna nogama pogalanu paakuriya

      Delete
    2. Wait and see . RTE-2009 implemented. And it's told that new posting or promotion must have TET. So you will try to get pass marks in tet. Nee thaan padikaama pathavi uyarvu ketkirai

      Delete
    3. Naan padikama ketkala... Govt should inform before promotion.. Naan teachers promotion kku TET vaikka poren... Exam elurhuravanga eluthuthattum... Ethuvum inform pannama ipdi TETPromotion poda mudiyum... Unna maathiri aalunga mattum Promotion la poveenga... Naanga viral soopikittu utakaranuma

      . Exam வச்ச niraiya பேர் clear pannuvanha... எங்க உனக்கு Promotion poidumonu bayama

      Delete
    4. I think you are my friend but you changed your name as trust

      Delete
  2. கோர்ட் ஒன்னு சொல்லும் அரசும் அதிகாரியும் வேற சொல்வாங்க செய்வாங்க ஆனால் பாதிக்க படுவது ஆசிரியரும் மாணவரும் தான் 😭

    ReplyDelete
  3. தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வாழ்க்கை வீணாகிவிட்டது என்று நம்பி வாக்குகள் அளித்தோம் என்பதை மறவாதீர். கடந்த ஆட்சியில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்து கொண்டு அந்த வருடத்தின் கடைசி வரை ஓட்டிவிடுவார்கள். நீங்களும் அதையே செய்து கொண்டு இருக்கிறீர்கள். நம்பி வாக்குகள் அளித்தோம் என்று பகுதி நேர ஆசிரியர்கள் முதற்கொண்டு பாதிக்கப்பட்ட நிலையில் பலர் தமிழ்நாடு முழுவதும் உள்ளனர்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி