தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 - ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண் .01 / 2022 , நாள் 07.03.2022 - ன் படி ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்- II ற்கான கணினி வழித்தேர்வுகள் ( Computer Based Examination ) 03.02.2023 முதல் 15.02.2023 வரை இருவேளைகளில் நடத்தப்பட்டது. இத்தேர்வில் 2,54,224 தேர்வர்கள் கலந்து கொண்டனர். இத்தேர்விற்கான தேர்வு முடிவுகள் 28.03.2023 அன்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
15,430 தேர்வர்கள் இத்தேர்வில் தகுதி பெற்றுள்ளனர் . 23.07.2022 நாளிட்ட ஆசிரியர் தேர்வு வாரிய பத்திரிக்கைச் செய்தியின்படி , அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய 24.07.2022 முதல் 27.07.2022 வரை ஏற்கனவே வாய்ப்பு வழங்கப்பட்டது.
எனவே , விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள தற்போது அளிக்கும் கோரிக்கையின் மீது ஆசிரியர் தேர்வு வாரியம் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாது OT OUT தெரிவிக்கப்படுகிறது.
தற்போது , விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தில் சமர்ப்பித்த விவரங்களின் அடிப்படையில் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் II -ல் தகுதி பெற்றவர்களுக்கு மட்டும் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் சான்றிதழ் ( Certificate ) 13.04.2023 இன்று முதல் மூன்று மாதம் வரை பதிவிறக்கம் செய்திடலாம் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி