680 அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர் இல்லை - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

May 18, 2023

680 அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர் இல்லை

 

தமிழகத்தில் 680 அரசு மேல்நிலை பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை.

பள்ளிக் கல்வி துறை கட்டுப்பாட்டில் 37 ஆயிரம் அரசு பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் மட்டும் 6000 உள்ளன.

தற்போது கோடை விடுமுறை காலம் என்பதால் பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன் ஆசிரியர் இடமாறுதல் பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதன்படி இரண்டு தினங்களுக்கு முன் இடமாறுதல் கவுன்சிலிங் துவங்கியது.

இடமாறுதலின்போது பல பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களாக கூடுதல் பொறுப்பில் இருந்தவர்கள் வேறு பள்ளிகளுக்கு மாறுதல் வாங்கி சென்று விட்டனர். அதையடுத்து 680 மேல்நிலை பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டால் தலைமை ஆசிரியர்கள் இல்லாமல் அப்பள்ளிகள் எப்படி செயல்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. நிர்வாக பிரச்னை ஏற்படும் என ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

எனவே அதற்குள் தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தேவையான நடவடிக்கை எடுக்குமாறு பள்ளிக் கல்வித் துறைக்கு ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

5 comments:

 1. மாட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்விற்கு பிறகு அரசு மேல்நிலை பள்ளிகளில் ஏற்பட்டுள்ள தலைமை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் தொடர்பான பட்டியல் இருந்தால் பதிவு செய்யுங்கள் இதற்கு முன்னதாக தாங்கள் மாவட்டத்திற்கு உள்ளாக நடைபெற்ற தலைமை ஆசிரியர் கலந்தாய்விற்கு பிறகு உள்ள காலி பணியிடங்களை தாங்கள் பதிவு செய்த தகவல் அடிப்படையில் நாங்கள் தெரிந்து கொண்டோம் இதேபோல் இதற்கும் செய்தால் நன்றாக இருக்கும்

  ReplyDelete
 2. கலந்தாய்வுக்குப் பின் உள்ள முதுகலையாசிரியர் காலிப்பணியிடங்களை காண்பியுங்கள்

  ReplyDelete
 3. Replies
  1. பதட்டப்பட ஒன்னும் இல்ல 😄 tet case முடிஞ்சா தான் இனி எதுவும் 😄😄

   Delete
 4. இது ஒரு சுழற்சி காலியாகுவதும் நிரப்பப்படுவதும் மாறி மாறி நடைபெற கூடிய சுழற்சி கல்வி ஆண்டு இறுதியில் பல தலைமை ஆசிரியர்கள் ஓய்வு பெற்றிருப்பார்கள் கல்வியாண்டு தொடர்ச்சியின் போது பலர் பதவி ஏற்பட்டிருப்பார்கள் இதன் தொடர்ச்சியாக ஏற்படும் காலிப் பணியிடம் மீண்டும் பதவி விரைவில் நிரப்பப்படும். நீண்ட காலமாக காலியாக இருப்பது போல ஒரு தேவையற்ற சர்ச்சை ஏற்படுத்தி, இது ஒரு செய்தியாக வெளியிட்டு அரசாங்கத்திற்கும் சமுதாயத்திற்கும் ஒரு அவர் பெயரை தெரியப்படுத்துகிறார்கள்.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி