பகுதி நேர ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடைக்குமா? - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

May 1, 2023

பகுதி நேர ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடைக்குமா?

 

மே மாதம் சம்பளம் வழங்க வேண்டும்' என, பகுதி நேர ஆசிரியர்கள், முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், முதல்வருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனு:


அரசு பள்ளிகளில், உடற்கல்வி, ஓவியம், கணினி உள்ளிட்ட எட்டு பாடங்களில், பகுதி நேர ஆசிரியர்களாக, 12 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். மாதம் தொகுப்பூதியமாக, 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.


தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறியபடி, பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மே மாதம் கோடை விடுமுறை காலத்திற்கு சம்பளம் வழங்கப்படுவதில்லை. இந்த ஆண்டு கருணையுடன், மே மாத சம்பளம் வழங்க வேண்டும்.


இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 comments:

  1. திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலும் தொடரும் அவலம்....

    ReplyDelete
  2. ஏற்கனவே பத்தாண்டு காலம் எவ்வித பலனும் இல்லாமல் வாழ்க்கை தொலைத்தவர்கள் பகுதி நேர ஆசிரியர்கள். தற்போது விடியல் கிடைக்கும் என்று நம்பி வாக்குகள் அளிக்க பலரிடம் எடுத்துக் கூறி ஜெயிக்க பாடுபட்டவர்களுக்கு இந்த ஆட்சியில் இரண்டு ஆண்டுகள் கழித்து இன்னும் விடியல் இல்லை. கண்ணீர் உள்ளனர் பகுதி நேர ஆசிரியர்கள்.

    ReplyDelete
  3. ஏற்கனவே பத்தாண்டு காலம் எவ்வித பலனும் இல்லாமல் வாழ்க்கை தொலைத்தவர்கள் பகுதி நேர ஆசிரியர்கள். தற்போது விடியல் கிடைக்கும் என்று நம்பி வாக்குகள் அளிக்க பலரிடம் எடுத்துக் கூறி ஜெயிக்க பாடுபட்டவர்களுக்கு இந்த ஆட்சியில் இரண்டு ஆண்டுகள் கழித்து இன்னும் விடியல் இல்லை. கண்ணீரில் உள்ளனர் பகுதி நேர ஆசிரியர்கள்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி