தொலைந்து, திருடு போன செல்போன்களை கண்டுபிடிக்க மத்திய அரசு புதிய திட்டம்... உருவாகிறது புதிய அமைப்பு. - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

May 16, 2023

தொலைந்து, திருடு போன செல்போன்களை கண்டுபிடிக்க மத்திய அரசு புதிய திட்டம்... உருவாகிறது புதிய அமைப்பு.

கர்நாடக காவல்துறை CEIR முறையைப் பயன்படுத்தி 2,500 க்கும் மேற்பட்ட தொலைந்த மொபைல் போன்களை மீட்டு அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தது.


தொலைந்து போன அல்லது திருடு போன மொபைல் போன்களை பிளாக் செய்து அவற்றை டிராக் செய்ய அகில இந்திய அளவில் ஒரு கண்காணிப்பு அமைப்பு விரைவில் இயங்கவுள்ளது. இதற்காக CEIR என்ற தொழில்நுட்ப அமைப்பின் செயல்பாட்டை நாடு முழுவதும் அரசு மே 17இல் இருந்து தொடங்கவுள்ளதாக மத்திய அரசு அலுவலர் தெரிவித்துள்ளார்.


CEIR இன் அடிப்படை நோக்கம் திருடப்பட்ட மற்றும் தொலைந்து போன மொபைல்கள் குறித்து புகாரளிப்பதை எளிதாக்கி அவற்றை பிளாக் செய்வதாகும். இதன் மூலம் செல்போன்கள் திருடப்படும் எண்ணிக்கை குறைத்து, திருடப்பட்ட மற்றும் தொலைந்து போன மொபைல்களை காவல்துறையினர் உதவியுடன் கண்டறியலாம்.அத்துடன் குளோன் செய்யப்பட்ட அல்லது போலியான மொபைல்களைக் கண்டறிவது எளிதாக்கப்படுகிறது. குளோன் செய்யப்பட்ட மொபைல்களின் பயன்பாட்டு இதன்மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. சமீபத்தில், கர்நாடக காவல்துறை CEIR முறையைப் பயன்படுத்தி 2,500 க்கும் மேற்பட்ட தொலைந்த மொபைல் போன்களை மீட்டு அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தது.
டெலிமேடிக்ஸ் துறைக்கான தொழில்நுட்ப மேம்பாட்டு அமைப்பு மையம் (CDoT) டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் வடகிழக்கு பகுதிகள் உட்பட சில தொலைத் தொடர்பு வட்டங்களில் CEIR அமைப்பின் பைலட்டை இயக்கி வருகிறது. மேலும் இந்த அமைப்பு இப்போது இந்தியா முழுவதும் பயன்படுத்த தயாராக உள்ளது.


இந்த திட்டம் தொடர்பாக CDoT தலைமை செயல் அதிகாரி ராஜ்குமார் உபாத்யாய, அகில இந்திய அளவில் திட்டத்தை தொடங்க அரசு தயார் நிலையில் உள்ளது. அதேவேளை, தொடக்க தேதி இன்னும் முடிவாகவில்லை. இந்தாண்டு இறுதிக்குள் இது பயன்பாட்டிற்கு வரும் என்றுள்ளார்


இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மொபைல் போன்கள் அனைத்திலும் 15 இலக்க தனித்துவ எண் எனப்படும் IMEI எண்ணை அரசு கட்டாயமாக்கியுள்ளது. தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் மற்றும் CEIR அமைப்பு சாதனத்தின் IMEI எண் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை கொண்டு கருவியின் தெரிவுநிலையை கண்டறியலாம். இந்த தகவலின் அடிப்படையில் தொலைந்து மற்றும் திருடு போன போனை கண்டுபிடிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி