அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை: தரவரிசைப் பட்டியல் வெளியீடு. - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

May 25, 2023

அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை: தரவரிசைப் பட்டியல் வெளியீடு.

 

தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள 1 லட்சத்து 7 ஆயிரத்து 395 இளநிலை பட்டப்படிப்புகளில் சேர 3 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இதனால் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தான் கேட்ட பாடப்பிரிவுகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் கல்லூரி வாரியாக தரவரிசைப் பட்டியல் தயார் செய்யப்பட்டு 25-ந்தேதி(நாளை) கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ் மொழி பட்டப்படிப்புக்கு தமிழ் மொழியில் பயின்றவர்களுக்காக தனி தரவரிசைப் பட்டியலும், ஆங்கில மொழி பட்டப்படிப்புக்கு ஆங்கில பாடத்தில் பெற்ற மதிப்பெண்கள், பிற இளநிலை பட்டப்படிப்புகளுக்கு மற்ற 4 பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தனி தரவரிசைப் பட்டியலும் வெளியிடப்பட உள்ளது.


சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவில் வரும் விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவர்களுக்கான கலந்தாய்வு 29-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து ஜூன் 1-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை முதல் கட்ட கலந்தாய்வும், ஜூன் 12-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை 2-ம் கட்ட கலந்தாய்வும் நடைபெற உள்ளது.


முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூன் 22-ந்தேதி வகுப்புகள் தொடங்கும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Admission Rank List - Click here


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி