செயல்படாத கணக்குகளை நீக்கும் கூகுள்! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

May 18, 2023

செயல்படாத கணக்குகளை நீக்கும் கூகுள்!

 டிசம்பரில் இருந்து செயல்படாத கணக்குகளை நீக்கும் பணியை கூகுள் தொடங்கவுள்ளது.


கூகுள் நிறுவனம் செயல்படாத கணக்குகளுக்கான கொள்கைகளை புதுப்பித்துள்ளது.  இந்த புதிய கொள்கை அனைத்து கூகுள் தயாரிப்புகளுக்கும் பொருந்தும் எனத் தெரிவித்துள்ளது.


நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படாத அல்லது உள்நுழைந்திருக்காத(log in) தனிப்பட்ட கூகுள் கணக்குகளுக்கான கொள்கையை கூகுள் நிறுவனம் மாற்றியுள்ளது.


2 ஆண்டுகளாக எந்தச் செயல்பாடும் இல்லாமல் உள்ள கணக்கு மற்றும் மின்னஞ்சல்கள், கோப்புகள், விடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் போன்ற அனைத்து உள்ளடக்கங்களையும் நீக்கும் பணியை கூகுள் தொடங்கவுள்ளது.


இந்த மாற்றம் தனிப்பட்ட கணக்குளுக்கு மட்டுமே பொருந்தும் எனவும், வணிகம், கல்வி உள்ளிட்ட நிறுவன கணக்குகளுக்கு பொருந்தாது எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


கணக்குகளை நீக்கும் முன்பு செயல்படாத மின் அஞ்சல் முகவரிக்கு கூகுளில் இருந்து கணக்குகளை புதுப்பிக்க வேண்டும் என்ற முன்னெச்சரிக்கை மின் அஞ்சலை கூகுள் நிறுவனம் அனுப்பும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி