தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது ஏன்? - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

May 2, 2023

தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது ஏன்?

 

தமிழக அமைச்சரவை கூட்டம், இன்று காலை, 11:00 மணிக்கு நடக்க உள்ளது.

தலைமைச் செயலகத்தில், சட்டசபை கூட்ட அரங்கில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில், இன்று காலை, 11:00 மணிக்கு, அமைச்சரவை கூட்டம் நடக்கிறது.


இம்மாத இறுதியில், முதல்வர் வெளிநாடு சுற்றுப்பயணம் செல்ல உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சர்கள் பலரும் வெளிநாடு செல்ல உள்ளனர். இதற்கு அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது.


சில தொழில் நிறுவனங்கள், தமிழகத்தில் தொழில் தொடங்க அனுமதி அளிக்கப்பட உள்ளது. நிதி அமைச்சர் பேசியதாக வெளியான ஆடியோவால் ஏற்பட்ட சர்ச்சை, சில சட்ட திருத்தங்களால் ஏற்பட்ட சர்ச்சை ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.


ஆட்சி பொறுப்பேற்று, இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், மூன்றாம் ஆண்டில் செய்ய வேண்டிய பணிகள்; ஜூன், 3ல், கருணாநிதியின் நுாற்றாண்டு துவக்க விழாவையொட்டி, புதிய திட்டங்களை அறிவிப்பது ஆகியவை குறித்தும், முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.


அமைச்சரவையில் மாற்றம் செய்ய, முதல்வர் திட்டமிட்டு உள்ளதாக தகவல் பரவி வரும் நிலையில், இன்று அமைச்சரவை கூட்டம் நடப்பது, முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி