கோச்சிங் சென்டர்களை முறைப்படுத்த அரசு முடிவு - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

May 16, 2023

கோச்சிங் சென்டர்களை முறைப்படுத்த அரசு முடிவு

 தனியார் 'கோச்சிங்' சென்டர்கள் நடத்துவதற்கு விதிமுறைகளை உருவாக்கி, அங்கீகாரம் பெறுவதை கட்டாயமாக்க, மத்திய அரசு கருத்து கேட்பு கூட்டங்களை நடத்தி வருகிறது.


மத்திய அரசின் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரத் துறையின் கீழ் செயல்படும், இந்திய தர நிர்ணய அமைப்பு எனும் பி.ஐ.எஸ்., உற்பத்தி பொருட்களுக்கு, இந்திய தரக்குறியீடு எண் எனும் ஐ.எஸ்.ஐ., முத்திரை வழங்கி வருகிறது.


இந்த நிறுவனம் தற்போது, தனியார் கோச்சிங் சென்டர்களை முறைப்படுத்த திட்டமிட்டுள்ளது.


மத்திய, மாநில அரசு போட்டித்தேர்வுகள், உயர்கல்வி நுழைவுத்தேர்வு களுக்கென, புற்றீசல் போல, கோச்சிங் சென்டர்கள் துவக்கப்படுகின்றன. எந்த அங்கீகாரமும் பெறாமல் செயல்படுவதோடு, தாறுமாறாக கட்டணம் வசூலிக்கின்றன.


மாணவர்களிடம் பெறும் தொகைக்கு, உரிய முறையில், அரசுக்கு வரி செலுத்துவதில்லை என்ற புகாரும் உள்ளது.


இதை நெறிப்படுத்தும் நோக்கில், பி.ஐ.எஸ்., நிறுவனம், மாநில வாரியாக, கருத்து கேட்பு கூட்டங்களை நடத்தி வருகிறது.


தமிழகத்தில், சென்னை, கோவை, மதுரை, திருச்சி மண்டலங்களில், தனியார் கோச்சிங் சென்டர் உரிமையாளர்கள், கல்வியாளர்கள் கொண்ட எட்டு பேர் குழு அமைத்து, கருத்துக்கள் பெறப்படுகின்றன.


மாநில வாரியாக பெறப்படும் கருத்துக்களை தொகுத்து, ஆகஸ்ட் மாதத்தில், வழிகாட்டி நெறிமுறை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

1 comment:

  1. இந்த கோச்சிங் சென்டர்களும், டியூஷன் சென்டர்களும் பெருகியதால்தான் கல்வித்தரம் குறைந்துபோனது. அதுமட்டுமின்றி பள்ளி ஆசிரியர்கள் பொறுப்புடன் பாடம் கற்பிப்பது குறைந்துவிட்டது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி