Plus Two : துணைத்தேர்வு: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 8, 2023

Plus Two : துணைத்தேர்வு: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

 

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூன் 19-ல் துணைத்தேர்வு நடத்தப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று வெளியிட்டார். தேர்வில் பங்கேற்ற 8.03 லட்சம் பேரில் 7.55 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். சுமார் 47,934 மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். இந்த மாணவர்களின் உயர்கல்வி பாதிக்கக்கூடாது என்பதற்காக உடனடியாக துணை தேர்வு நடத்தப்படுகிறது.


துணை தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் இந்த கல்வியாண்டிலேயே உயர்கல்வியை தொடர முடியும். அதன்படி தமிழ்நாட்டில் பிளஸ் 2 துணைத்தேர்வு ஜூன் 19ம் தேதி துவங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. துணைத்தேர்வு குறித்த முழுமையான அறிவிப்பு இன்று மாலைக்குள் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்திருக்கிறது. பிளஸ்டூ தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள், துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தோல்வியடைந்த மாணவர்கள் மனநல ஆலோசனை பெற 14417 என்ற எண்ணை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி