TET தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்க கோரி 3வது நாளாக உண்ணாவிரத போராட்டம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 11, 2023

TET தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்க கோரி 3வது நாளாக உண்ணாவிரத போராட்டம்!

 

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்க கோரி சென்னை டிபிஐ வளாகத்தில் மூன்றாவது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.


2013 ஆண்டு சென்னை டி பி ஐ வளாகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வான டெட் தேர்வு நடத்தப்பட்டது. பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் 10 ஆயிரம் பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டது. 30 ஆயிரம் பேர் தேர்வான நிலையில் மீதமுள்ள 20 ஆயிரம் பேருக்கு அரசு பணி வழங்க கோரி இரு தினம் முன்பு டி பி ஐ வளாகத்தில் அனுமதியின்றி உண்ணாவிரத போரட்டத்தை தொடங்கினர்.


மூன்றாவது நாளாக நடைபெறும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் சுமார் 500 க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் மயங்கி விழுபவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இந்நிலையில் உண்ணாவிரத போராட்டத்தில் மயங்கி விழுந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.


மேலும், தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதி எண் 177 ல் குறிப்பிட்ட டெட் தேர்வில் தேர்வானவர்களுக்கு பணி வழங்குவோம் எனும் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி மூன்றாவது நாளாக தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


அரசானை எண் 149 ஐ ரத்து செய்து உடனடியாக பணி வழங்க வேண்டும் என முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்தனர். எத்தனை முறை தேர்வு வைத்தாலும் தாங்கள் தகுதி தேர்வு எழுத தயாராக உள்ளதாக கூறினர்.

8 comments:

  1. 2013ல் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வேலை கொடுப்பதென்றால் அடுத்த 20 ஆண்டுகளுக்கு tet தேர்வை நடத்தத் தேவையில்லை.Pg trbல் ஒரு மதிப்பெண்ணில் பணி வாய்ப்பை இழந்தவர்களுக்கு அடுத்த தேர்வுகளில் முன்னுரிமை அளிப்பதில்லை.அது போல்தான் tet தேர்வும்.tetல் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும்

    ReplyDelete
  2. 2013 ல் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை நேரடி நியமனம் செய்யாமல் அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பாமல் பகுதிநேர ஆசிரியர்கள் மற்றும் இசை, ஓவிய ஆசிரியர்களை முக்கிய பாடங்களை எடுக்கும் கற்பித்தல் பணியில் ஈடுபடுத்தி வருகின்றனர். இந்நிலை நீடித்தால் நிச்சயம் தரமான திறமையான மாணவர்கள் உருவாவது கடினம். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்குப் பணி கிடைக்காமல் இருப்பதற்கு முக்கிய காரணம் ஏற்கனவே அரசுப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாகப் பணியில் உள்ளவர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் பதவி உயர்வு பெறவேண்டும் என்ற சுயநலமான சிந்தனையே

    ReplyDelete
  3. அருமையான பதிவு

    ReplyDelete
  4. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தொடர்ந்து 3 வது நாளாக உண்ணாவிரத போராட்டம் தீர்வு என்ன?TET PASS + B.Ed EMPLOYMENT SENIORITY இந்த முறையில் பணி நியமனம் செய்தால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது. G.O 149 ஐ நீக்கம் செய்து பிஎட் சீனியாரிட்டி அடிப்படையில் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்றவர்களை ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டும்.GO 149 ஆனது 2018 ல் தான் வந்தது என்று 2013 க்கு மட்டுமே முன்னுரிமை அளிக்க போராட்டம் செய்யாமல் 2017க்கும் முன்னுரிமை அளிக்க போராடலாம்.ஆகையால் ஆசிரியர் தகுதித் தேர்வு ஒரு தகுதித் தேர்வு தான் அந்த மதிப்பெண் கொண்டு பணி வழங்காமல் GO 149 நீக்கம் செய்து பிஎட் பதிவு எம்பிளாய்மென்ட் சீனியாரிட்டி அடிப்படையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை பணி நியமனம் செய்தால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  5. ஆசிரியர் தகுதி தேர்வும் வேண்டாம் நியமன தேர்வும் வேண்டாம், நேரடியாக 12, UG மற்றும் B.ED மதிப்பெண்கள் வைத்து தேர்வு செய்யுங்கள். இது தான் சரியான தீர்வு.

    ReplyDelete
  6. 2013 இல் குறைந்த பட்ச மதிப்பெண் பெற்று வேலை வாய்ப்பை இழந்தவர்கள்
    எப்படி அடுத்த நியமனத்திற்கு முன்னுரிமை பெற முடியும், இது சட்டத்திற்கு
    புறம்பானது, அப்படி என்றால் PGTRB யில் 75 க்கு மேல் எடுத்தவர்கள் தான்
    அடுத்த தேர்வுக்கு முன்னுரிமை பெறுவார் என்று இல்லையே. இவர்களின்
    போராட்டம் நியமன தேர்வுக்கு தயாராகாமல் படிக்காமல் இலவசமாக வேலை பெற
    வேண்டும் என்ற ஒரு எண்ணம் தவிர வேறு ஒன்றும் இல்லை.
    2013 மற்றும் 2014 ஆகிய இரு ஆண்டுகளில் 32000 க்கும் மேற்பட்ட தொடக்க
    மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப பட்டன. அப்பொழுது
    சான்றிதழ் சரிபார்ப்புக்கு சென்று வேலை கிடைக்காமல் தோற்றவர்களுக்கு
    மட்டுமே இப்பொழுது வேலை கொடுக்க வேண்டும் என்பது என்ன ஒரு முட்டாள் தனம்.
    அதன் பிறகு படித்து ஆசிரியர் தேர்வுக்காக காத்திருப்போர் வாழ்வாதாரம்
    என்ன ஆவது. 2017 க்கு பிறகு தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஒரு
    போராட்டம் நடத்த வேண்டும்.

    ReplyDelete
  7. அட மடப்பயலுகளா....போயி நியமன தேர்வுக்கு படிக்க பாருங்கடா...நான் Paper 2 la 97 mark BC வயது 38எடுத்திருக்கிறேன் ...இப்போ மூடிகிட்டு உக்கார்ந்து படிச்சுட்டு இருக்கேன்..?.போயி படிக்கிற வேலைய பாருங்க... already வேலைபாக்குறவங்கள்ள உபரி ஆசிரியர்கள் நிறைய இருக்காங்க..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி