TET - ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 13, 2023

TET - ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்

 

சென்னை நுங்கம்பாக்கத்தில் 5 நாட்களாக தொடர்ந்த ஆசிரியர்கள் போராட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது. 

அரசாணை எண் 149ஐ ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர்கள் சென்னை நுங்கம்பாக்கம் பள்ளிக் கல்வித்துறை வளாகத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களின் போராட்டம் இன்று 5ஆவது நாளை எட்டியது. 

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களிடம் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அமைச்சரின் இந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து ஆசிரியர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, சட்டச்சிக்கலை நீக்குவது தொடர்பாக உறுதியளித்துள்ளோம் என்றார். முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆசிரியர்களுக்கு சீமான், அண்ணாமலை, தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் நேரில் ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

6 comments:

  1. இதுவும் ஏமாற்று வேலை

    ReplyDelete
  2. பொதுவாக யாரும் பாதிக்கா வண்ணம் விதிமுறை வகுக்க வேண்டும் 2013 2017 2019 2023ன்னு அடிச்சிக்காதிங்க முதல்ல

    ReplyDelete
  3. இப்ப ஜூஸ் அடுத்து ?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி