TNTET - ஆசிரியர் தகுதி தேர்வு கடந்து வந்த பாதை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 13, 2023

TNTET - ஆசிரியர் தகுதி தேர்வு கடந்து வந்த பாதை

 

2010 ஆம் ஆண்டு மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி சட்டத்தின் படி ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. அப்போது இருந்து ஆட்சியாளர்கள் தகுதி தேர்வில் அதிக மதிப்பெண் பெறுபவர்க்கே பணி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டனர். ஆனால் தகுதி தேர்வு என்பது   ஆசிரியர் பணிக்கான தகுதி தேர்வு தான் தவிர அதன் அடிப்படையில் பணி நியமனம் செய்ய க்கூடாது என்று ஒரு சிலர்  நீதி மன்றத்தை நாடினர் நீதிமன்றமும் வேறு ஏதாவது அடிப்படையில் பணி நியமனம் செய்ய அரசுக்கு பரிந்துரை செய்தது. இதனால் அரசு  தகுதி தேர்வுக்கு ஓரிரு நாட்களுக்கு முன் வெயிட்டேஜ் முறை என்ற ஒரு புதிய அரசாணையை வெளியிட்டது. முதன் முதலில் ஆசிரியர் தகுதி தேர்வு 2012 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தகுதி தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2 நடைபெற்றது. தேர்வில் சுமார் 4 முதல் 5 லட்சம் பேர் தேர்வை எழுதினர். தேர்வு முடிவு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது. ஆனால் காலிப் பணியிடங்களை காட்டிலும் மிகக் குறைவான அளவில் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றனர் இதனால் ஆசிரியர் தேர்வு வாரியம் மறுதேர்வை அக்டோபர் மாதம் நடத்தியது இதற்காக தேர்வு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படவில்லை. இதற்கான தேர்வு முடிவை நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது தேர்வில் இடைநிலை ஆசிரியர்கள் 12,000 க்கு மேலும் பட்டதாரி ஆசிரியர்கள் 10000 க்கு மேலும் தேர்ச்சி பெற்றனர் அப்போது ஏற்பட்ட காலிப் பணியிடங்களின் மூலம் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்பட்டது. பிறகு 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதி தேர்வை நடத்தியது ஆனால் இந்த தகுதி தேர்வில் அதிக அளவில் ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றனர் இதனால் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி நியமனம் வழங்க முடியவில்லை. எனவே வெயிட்டேஜ் முறையை அரசு பின்பற்றியது இந்த வெயிட்டேஜ் முறையை எதிர்த்து பாதிக்கப்பட்ட ஒரு சிலர் மதுரை உயர்நீதிமன்ற கிளையை நாடினர் நீதி அரசர் நாகமுத்து அவர்கள் வெயிட்டேஜ் முறையை அறிவியல் பூர்வமாக கணக்கிடும்படி அரசுக்கு பரிந்துரை செய்தார்.அதே சமயத்தில் அன்று முதலமைச்சராக இருந்த மறைந்த அம்மையார் ஜெயலலிதா அவர்கள் சட்டமன்றத்தில் தகுதி தேர்வுக்கான மதிப்பெண்ணை 90 ல் இருந்து 82 ஆக குறைத்தார்
 இது தற்போது நடைபெற்ற 2013-க்கும் பொருந்தும் என்றும் கூறினார்.

 எனவே எனவே தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகளவில் உயர்ந்தது. வெயிட்டேஜ் முறையில் 12 ம் வகுப்பு, இளங்கலையில் (UG) மற்றும் B.Ed யில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதுவரை போராடாத ஆசிரியர்கள் வெயிட்டேஜ் முறையை எதிர்த்து போராடினர் அரசும் இவரது போராட்டத்தை கண்டு கொள்ளவில்லை பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தை நாடினர் நீதிமன்றமும் இடைக்கால தடை பிறப்பித்தது இருப்பினும் அரசு மேல்முறையீடு செய்து தடையை நீக்கியது. பணி நியமனம் இரவோடு இரவாக மாவட்ட கல்வி அலுவலகத்தில் வழங்கப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் 2017 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வை நடத்தியது இதில் கணிசமான அளவில் தேர்ச்சி பெற்றனர் ஆனால் பணி நியமனம் ஏதும் வழங்கப்படவில்லை அதே ஆண்டில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு போட்டி தேர்வை நடத்த அரசாணை 149 பிறப்பித்தது. ஆசிரியர் தேர்வு வாரியம் 2019 ஆம் ஆண்டு மீண்டும் தகுதி தேர்வை நடத்தியது இதில் மிகக் குறைந்த அளவே தேர்ச்சி பெற்றனர். ஆசிரியர் தேர்வு வாரியம் 2021 ஆம் ஆண்டு வருடாந்திர தேர்வு அட்டவணையில் போட்டிதேர்வு அடிப்படையில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார் என அறிக்கை வெளியிட்டது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமன அறிவிப்பை வெளியிட்டது.அதில் இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வும் நடைபெறும் என்றும் அறிவித்தது. முதன்முதலாக ஆசிரியர் தகுதித் தேர்வு கணினி வழியில் நடைபெற்றது. இதில் கணிசமான முறையில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தற்போது இடைநிலை ஆசிரியர்  6000 பணியிடங்களுக்கு மேல் உள்ளது இதற்கு 60,000 க்கு மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இதே போல் பட்டதாரி ஆசிரியர்களின் சுமார் 4000 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது இதிலும் 60 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

ஆசிரியர் தேர்வு வாரியம் மே மாதம் போட்டி தேர்வுக்கான அறிவிப்பை வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது. ஆனால் 2013ல் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் 10 ஆண்டுகளுக்குப் பிறகு எங்களால் எவ்வாறு நியமன தேர்வை எதிர்கொள்ள முடியும் என்று நியமனத் தேர்வை ரத்து செய்ய(Go.149) வேண்டும் என்றும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் (TET+ EMPLOYMENT SENINORITY) செய்யப்பட வேண்டும் என்று போராட்டத்தை தற்போது நடத்தி வருகிறார்கள் இந்த போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், கல்வியாளர்களும, ஆசிரியர் கூட்டமைப்பினரும், ஆதரவு அளித்து வருகிறார்கள்.
ஒரு சிலர் போட்டி தேர்வுக்கு தயார் செய்து கொண்டு வருகின்றனர்.
 ஆனால் தற்போது போட்டித் தேர்வு நடைபெறுமா ? அல்லது தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவரை நேரடி பணி நியமனம் செய்யப்படுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் 

      நன்றி வணக்கம்...

14 comments:

  1. 2013 சுயநலவாதிகளுக்கு எதுவும் நடக்கப் போவதில்லை இவனுங்க மட்டும் தான் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்களாம் இவனுங்க மட்டும்தான் CV முடித்துள்ளார்களாம் 2017 எங்கடா போவது பரதேசிகளா 2017 ம் CV முடித்துள்ளார்கள் என்பதை அறியாமல் இருக்கிறீர்கள் மேலும் GO 149 என்பது 2017 க்கும் பொருந்தாது என்பதை அறியாமல் இருக்கிறீர்கள் அடிப்படை அறிவே இந்த பரதேசிகளுக்கு இல்லை அப்படி இருக்கையில் நீங்கள் எவ்வாறு சிறந்த ஆசிரியராக விளங்க முடியும்

    ReplyDelete
  2. Tet marks+employement seniority

    ReplyDelete
  3. நீதி லூசு பையா நியமன தேர்வை 2013 அல்லது 2014 வைத்து இருந்தாள் நாங்க ஏன் போராட போறோம் சுயநலவாதி நாங்க இல்லடா நீங்கதாண்டா 2017 பாஸ் பண்ண உண்ண 2037 நியமன தேர்வு எழுத சொன்னா உன்னால் முடயுமா

    ReplyDelete
    Replies
    1. The teacher is a continuous learner இதனை நினைவில் வைத்துக்கொள் மூதேவி...இவர்களால் தேர்வு எழுத முடியாதாம் ஆனால் வேலை மட்டும் வேண்டுமாம் நீங்க பாஸ் செய்தது பழைய பாடத்திட்டம் இப்போதைய பாடதிட்டத்திற்கு UPDATE ஆகுங்கடா வெண்ணெய்களா....

      Delete
  4. தகுதித் தேர்வுக்கு மற்றொரு தகுதித் தேர்வு.இதுதான்திராவிடமாடல்.

    ReplyDelete
  5. 2013ல் 12000 ஆசிரியர்கள்,2014ல் 10000 ஆசிரியர்கள் நயமனம் செய்யப்பட்டனர்.அதன்பிறகு காலிப்பணியிடம் இல்லை. தற்போதுதான் கணிசமான காலிப் பணியிடம் உள்ளது.2014க்குப் பிறகு 2017,2019,2023ஆம் ஆண்டுகளில் tet நடைபெற்றது்அப்படி இருக்கையில் 2013ல் தேர்ச்சி பெற்றவர்கள் தமக்கு மட்டும் வேலை கேட்பது எந்த வித்த்தில் ஏற்புடையது.போட்டித் தேர்வுகளில் ஒரு தேர்வில் ஒரு மதிப்பெண்ணில் தோல்வி அடைந்தால் அடுத்த தேர்வுகளில் முன்னுரிமை அளிப்பதில்லை.இதை அனைவரும் புரிந்து கொண்டு நியமனத் தேர்விற்கு தயாராக வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. வேயிட்டேஜ் முறையில் பாதிக்கப் பட்டவர்கள்

      Delete
  6. நீதி பைதியம் மாணவர்களுக்கு சொல்லித்தர தினமும் படிக்கலாம் ஒரு வேளை வாங்க ஒன்பது தேர்வா எழுதமுடியும் 2022-2023 Xstd மற்றும் XIIStd நான் அனுப்பிய 19வது பேட்சி குறைந்தது ஒவ்வொரு வருடமும் 10 to 15 மாணவர்கள் 100 க்கு 100மதிப்பெண் பெற்றுள்ளனர் நான் maths major subject ல என்னோட போட்டிக்கு யார் வேண்டும் என்றாலும் வரலாம் சுயநலவாதி நான் என்னை பார்க்கவில்லை என்னோட வயதில் முதியவர்களை பார்கிறேன் மற்றும் இந்த 10ஆண்டுகளில் குடும்ப சூழ்நிலை எவ்வளவோ மாறி இருக்கும் அதை யோசித்து பார் மூதேவி

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி