தமிழக உள்ளாட்சிகளுக்கு புதிதாக, 10,000 பொறியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
சென்னை மாநகராட்சியில், 200 இடங்கள் உட்பட, உள்ளாட்சி அமைப்புக்கள் மற்றும் குடிநீர் வாரியத்தில், 10,000த்துக்கும் மேற்பட்ட, பொறியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுகுறித்து, நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளை பொருத்தவரை, பொறியாளர்களை, நேர்முக தேர்வு வாயிலாக, நகராட்சி நிர்வாகம் தான் முடிவு செய்யும். தற்போது, 10,000 பணியிடங்களை, அரசு நிரப்ப உள்ளது.
இதற்கான பணிகள், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக நடக்குமா, ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி நடக்குமா என்று தெரியவில்லை. தற்போது, காலி பணியிடங்களை அரசு கேட்டுள்ளது. இந்த விபரங்கள் கிடைத்தபின், முறையான அறிவிப்பு வெளியாகும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Aamanda.... First posting potutu than adutha velaya papanunga..
ReplyDelete