1,105 அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர் இல்லை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 1, 2023

1,105 அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர் இல்லை

 


தமிழகத்தில், 1,105 அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லாமல், புதிய கல்வி ஆண்டில் பள்ளிகளை நடத்துவதற்கான நிர்வாக பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.


தமிழக பள்ளிக்கல்வி துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும், 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில், 46 லட்சம் மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.


இந்த பள்ளிகளில், 2.32 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இந்த ஆசிரியர்களுக்கு சமீபத்தில், விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், 1,105 பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது, 670 மேல்நிலை பள்ளிகளிலும், 435 உயர்நிலை பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால், பள்ளிகளின் நிர்வாக பணிகளை மேற்கொள்வதில், சுணக்கம் ஏற்பட்டுள்ளது.


பள்ளிகளை திறந்து, வரும் கல்வி ஆண்டுக்கான பணிகளை மேற்கொள்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


எனவே, பள்ளிகளில் பணிகளை கவனிக்க, மூத்த முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, பொறுப்பு தலைமை ஆசிரியர் பதவி அளிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


ஆனால், பொறுப்பு தலைமை ஆசிரியர் நியமிக்கப்படுபவர் தனது வழக்கமான பாடம் கற்பிக்கும் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படும்.


அதனால், மாணவர்களுக்கான கல்வி திறன் பாதிக்கப்படும் என, ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


எனவே, தலைமை ஆசிரியர்களை விரைவில் நியமித்து, நிர்வாக பணிகளை சீர்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

4 comments:

 1. தலைமை ஆசிரியர் மட்டும் இல்லை. பாடம் கற்பிக்கும் பட்டதாரி ஆசிரியர்களும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
  இந்த ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்
  முற்றிலும் தவறு.

  ReplyDelete
 2. Tet pass செய்தவர்களுக்கு தீர்வு தான் என்ன.exam varuma இல்லை.tet pass + Employeement seniority la posting podungal

  ReplyDelete
 3. Devudiya model eduku oru educational minister miru sudalai ki jallra poda tu

  ReplyDelete
 4. பள்ளிக் கல்வி துறையில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்கள் பலர் உரிய கல்வித் தகுதியுடன் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர் ஆனால் அவர்களுக்கு கடந்த பத்து ஆண்டுகளாக பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர் இது மிகப் பெரிய அநீதி

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி