இலவு காத்த கிளி : பணி நிரந்தரத்திற்கு காத்திருக்கும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 10, 2023

இலவு காத்த கிளி : பணி நிரந்தரத்திற்கு காத்திருக்கும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள்

இலவு காத்த கிளி :

பணி நிரந்தரத்திற்கு காத்திருக்கும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் :

பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் அறிக்கை:

தமிழில் இலவு காத்த கிளி என்ற கதை ஒன்று சொல்வார்கள்.

அதுபோல, அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில்  தற்காலிகமாக 12 ஆண்டுகளாக  ரூபாய் 10ஆயிரம் தொகுப்பூதியத்தில்  பணியாற்றுகிற கணினி, உடற்கல்வி, ஓவியம், இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல்திறன் பாட 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் தங்கள் பணி நிரந்தரம் செய்யப்படும் என்று கிளியை போல் காத்திருந்தும் பயன் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.

பள்ளிக்கல்வித்துறையில் 2012-ம் ஆண்டு நியமித்த பகுதிநேர ஆசிரியர்களை மட்டும் பணி நிரந்தரம் செய்ய அரசு ஏன் தயங்குகிறது என்று தெரியவில்லை.

இதே காலகட்டத்தில் அரசு பள்ளிகளில் நியமித்த 5 ஆயிரம் துப்புரவாளர்கள் மற்றும் இரவு காவலர்கள் பின்னர் பணி நிரந்தரம் செய்யப்பட்டதை அரசு கவனத்தில் எடுத்து கொள்ளாமல் இருக்கலாமா?

 தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள், பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தற்காலிக பணியாளர்கள் அனைவரும் பணி நிரந்தரம்  செய்யப்படுவார்கள் என்று திமுக தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டு இருந்தது.


திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் என  நம்பினர்.

அந்த நம்பிக்கை இன்னும் நிறைவேறவில்லை; அவர்களின் துயரங்களும் தீரவில்லை. 

இதற்கு முன் கடந்த 2006-ஆம் ஆண்டில் கலைஞர் முதலமைச்சராக பதவியேற்றவுடன் மிகக்குறைந்த ஊதியத்தில் தற்காலிக ஆசிரியர்களாக பணியாற்றி வந்த 50,000 பேரை ஒரே ஆணையில் பணி நிரந்தரம் செய்தார்.

அப்போதும் அரசுக்கு நிதி நெருக்கடி இருந்தது.

ஆனாலும் இந்த நடவடிக்கையால் அரசின் நிதிநிலைமைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இப்போதும் தற்காலிக நிலையில் 10 ஆண்டுக்கும் மேலாக பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்கள், ஊழியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்வதால் அரசுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடாது.

இதை மனதில் கொண்டு பகுதிநேர ஆசிரியர்களை, பணி நிரந்தரம் செய்து முதலமைச்சர் ஆணையிட வேண்டும்.

பள்ளிக்கல்வித்துறையில் இதற்கு முன்பு தற்காலிகமாக பணிபுரிந்த 5 ஆயிரம் பகுதிநேர தொழிற்கல்வி ஆசிரியர்கள், 2 ஆயிரம் கணினி ஆசிரியர்கள், 5 ஆயிரம் இசை, தையல், ஓவியம், உடற்கல்வி ஆசிரியர்கள் போன்றோர் பணி நிரந்தரம் செய்யப்பட்டதை அரசு கவனத்தில் எடுத்து கொள்ளாமல் இருக்கலாமா?

ஒடிசா மாநிலத்தில் 57ஆயிரம் தற்காலிக பணியாளர்கள், ராஜஸ்தான் மாநிலத்தில் 1.10 லட்சம் தற்காலிக  பணியாளர்கள் முறைப்படுத்தப்பட்டு நிரந்தரம் செய்யப்பட்டுள்ளார்கள்.

தமிழ்நாட்டிலும்  இதுபோல் முதல்வர் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

*************************
S.செந்தில்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்,
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு,
செல் : 9487257203

10 comments:

  1. வாய்ப்பு இல்லை. போராடத போராட்டமா? பலருக்கு ஓய்வு பெறும் வயது வந்து விட்டது. எனவே , இருக்கும் வரை பணி புரியலாம்.

    ReplyDelete
  2. எல்லா நாயிங்களும் ஒன்னா கொளுத்திகிட்டு சாவுங்கடா ஏண்டா டெட் கிளியர் பண்ணாம எந்த.....வேல குடுப்பா தூ

    ReplyDelete
    Replies
    1. தகுதி தேர்வு தேர்ச்சி பெற்று பத்து ஆண்டுகள் ஆகின்றன. கடந்த ஆட்சியில் எவ்வித நியமனமும் செய்யாமல் இப்போது இந்த ஆட்சியில் எவ்வித நியமனமும் செய்யாமல் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்து கொண்டு வருடத்தின் கடைசி வரை ஓட்டிவிடுவார்கள். அதைப்பற்றி கேள்வி கேட்க ஆளில்லை. இவர்கள் கோரிக்கை வைப்பது பற்றி கருத்து பதிவு செய்து உள்ளீர்கள். முதலில் உங்கள் நியமனம் என்ன என்று யோசியுங்கள். இதோ தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

      Delete
  3. TET Pass பன்னவங்களுக்கே வேலை கொடுக்க மாட்டறானுங்க இவனுங்கள தேர்வே எழுதாம Parmanent பன்னனுமாம் போங்கடா டேய்..

    ReplyDelete
  4. TET clear pannavangalukke job illa... Neenga vera comedy pannathinga paaa... Poi vera velaiya paaarunga....

    ReplyDelete
  5. Tntet 2012 : 89
    2013 : 91 ( cv cleared )
    2017 : 108 marks
    but no posting 😒😒😞

    ReplyDelete
    Replies
    1. Kavi நீங்கள் எந்த பாடம்

      Delete
  6. மாதத்தில் மொத்தம் 12 அரை நாள் (6 முழு நாள் ) சம்பளம் 10000 அப்படியே கணக்கு பண்ணாலும் 1 நாளைக்கு 1600 சம்பளம்.... இதுல இதுவே பத்தலை.... அவன் அவன் டெட் பாஸ் பண்ணிட்டு இந்த அரசு நியமன தேர்வுக்கு வேற படிக்கணும் னு சாவுறம் ஆனா நீங்க எந்த தேர்வும் எழுதாம பணி நிரந்தரம் ஆகிடணும்.... வேற லெவல் போங்க

    ReplyDelete
  7. அதுக்கு (TET) கூட‌ தகுதி ஆகாத பரதேசி பன்னாட தான நீ போ நாய அப்படி ஓரமா போய் பிச்சை எடு...

    ReplyDelete
  8. Super. இப்படியே எல்லாரும் நன்றாக அடித்து கொள்ளவும்... நீங்களே ஒற்றுமையாய் இல்லாத போது ஒற்றுமையே வலிமை என்று எங்கள் பிள்ளைகளுக்கு எப்படி கற்று கொடுக்க போகிறீர்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி