பள்ளிக்கல்வி வளர்ச்சி தொடர்பாக சென்னையில் ஜூன் 22, 24-ல் கலந்துரையாடல் கூட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 17, 2023

பள்ளிக்கல்வி வளர்ச்சி தொடர்பாக சென்னையில் ஜூன் 22, 24-ல் கலந்துரையாடல் கூட்டம்

 

பள்ளிக்கல்வி வளர்ச்சி மற்றும் பணியாளர் நலன் குறித்து, ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் கூட்டம் சென்னையில் ஜூன் 22, 24-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.


இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் க.அறிவொளி, அனைத்து ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் பணியாளர்களின் கோரிக்கைகளை அறிந்துகொள்ள ஏதுவாகவும், பள்ளிக்கல்வியின் வளர்ச்சி சார்ந்தும் துறையின் அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் கலந்துரையாடல் கூட்டம் சென்னை டிபிஐ வளாகத்தில் ஜூன் 22, 24-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.


இக்கூட்டத்தில் பள்ளிக்கல்வி முதன்மைச் செயலர் காகர்லா உஷா மற்றும் துறைசார்ந்த இயக்குநர்கள் பங்கேற்க உள்ளனர். முதல்நாளில் தலைமை ஆசிரியர், முதுநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், தொழிற்கல்வி ஆசிரியர், சிறப்பாசிரியர், உடற்கல்வி ஆசிரியர்களுக்கான கூட்டம் நடைபெறும். 2-ம் நாளில், தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள், தனியார் பள்ளி நிர்வாகிகள், நூலகர்கள் மற்றும் இதர துறைசார் அலுவலர்கள், பணியாளர்களுக்கான கூட்டம் நடத்தப்படும்.


இக்கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள சங்கத்தில் இருந்து 3 பேரும், பதிவுசெய்த சங்கங்களில் இருந்து 2 பேரும் பங்கேற்கலாம்.

2 comments:

  1. கூட்டம் போட்டு வேலையா போட போறாங்க TET பாஸ் பண்ணுங்க வாழ்க்கையில மண்ண வாரி போட போறாங்க போங்கையா நீங்களும் உங்க கூட்டமும்

    ReplyDelete
  2. நடிக்காதீங்கடா "தெய்வங்கள்" இருக்கிறார்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி