மழை, வெயில், கரோனா என இந்த ஆண்டுகளில் பள்ளிப் படிப்பை படிக்கும் மாணவர்களைப் போல அதிர்ஷ்டசாலிகள் வேறு இல்லை என்று கூறும் அளவுக்கு விடுமுறைப் பட்டியல் ஆண்டுதோறும் நீண்டுகொண்டேச் செல்கிறது.
கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது வரலாற்றில் 1996ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக சென்னையில் ஜூன் மாதத்தில் மழைக்காக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக வானிலை நிலவரங்களை வெளியிட்டு வரும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
அதாவது, ஜூன் மாதம் பாதி வரை வெயிலுக்கும், பள்ளிகள் திறந்து ஒரு சில நாள்களிலேயே மழைக்கும் விடுமுறை விடப்படும் விந்தை ஜூன் மாதத்தில்தான் நிகழ்ந்துள்ளது.
இது பற்றி தமிழ்நாடு வெதர்மேன் கூறுகையில், 1991, 1996ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு 2023ஆம் ஆண்டுதான் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் கனமழை பதிவாகியிருக்கிறதாம். இந்த மழைக்குக் காரணம், கடலிலிருந்து புறப்பட்டு வரும் மழை மேகக்கூட்டங்கள்தான்.
இதே ஜூன் மாதத்தில்தான் வரலாற்றில் பார்க்காத வெயிலையும் சென்னை மக்கள் பார்த்தனர். இயற்கையே நமக்கு நியாயம் செய்யும் வகையில், இப்படியொரு மழையைக் கொடுத்திருக்கிறது. கடலிலிருந்து வரும் மேகக் கூட்டங்களால் இப்படியொரு மழை என்பது இதுவரை ஒரு கனவாகவே இருந்துள்ளது. கடந்த 1996ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பெய்த மழையின்போது ஒரு வாரத்துக்கு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது என்று முந்தைய கால நிகழ்வுகளையும் எடுத்துக் குறிப்பிட்டுள்ளார் தமிழ்நாடு வெதர்மேன்.
1996ஆம் ஆண்டு வரலாற்றை உடைக்கவே முடியாதாமே..
1996ஆம் ஆண்டு 150 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. இதுபோன்று ஒரு ஆண்டும் மழை பெய்ததில்லை. ஜூன் மாதத்தில் கனமழை என்பது மிகவும் அரிதானது. இன்னும் 1000 ஆண்டுகள் ஆனாலும் 1996ஆம் ஆண்டு வரலாற்றை உடைக்கவே முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் எங்க சேலம் மாவட்டத்திற்கு லீவு விடலையே ஐயா 😭😭
ReplyDelete