தமிழ்நாட்டின் 49வது தலைமைச் செயலாளராக ஷிவ் தாஸ் மீனா நியமனம்..! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 29, 2023

தமிழ்நாட்டின் 49வது தலைமைச் செயலாளராக ஷிவ் தாஸ் மீனா நியமனம்..!

தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலாளராக ஷிவ் தாஸ் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுவரை கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த ஷிவ் தாஸ் மீனா தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய தலைமைச் செயலாளர் இறையன்பு நாளையுடன் ஓய்வு பெறுவதால் அப்பொறுப்புக்கு ஷிவ் தாஸ் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஜெய்ப்பூரில் மாளவியா பிராந்திய பொறியியல் கல்லூரியில் சிவில் என்ஜினியரிங் படித்தவர். ஜப்பானில் சர்வதேச ஆய்வுகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர். இதுவரை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையை மீனா கவனித்து வந்தார்.


ராஜஸ்தான் மாநிலத்தை சேந்த ஷிவ் தாஸ் மீனா 1989ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக பணியை தொடங்கியவர். காஞ்சி உதவி ஆட்சியராக பணியை தொடங்கிய ஷிவ் தாஸ் மீனா, கோவில்பட்டி உதவி ஆட்சியர் உள்பட பல பதவிகளை வகித்தவர். ஊரக வளர்ச்சித்துறை, நில நிர்வாகத்துறை, போக்குவரத்துத் துறை, ஆகியவற்றிலும் முக்கிய பொறுப்பு வகித்தவர் ஷிவ் தாஸ் மீனா. கூட்டுறவு, உணவு, நுகர்வோர் துரையின் முதன்மை செயலாளராகவும் பதவி வகித்தவர். 2016ல் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 4 செயலாளர்களில் ஒருவராக இருந்தவர். 58 வயதாகும் ஷிவ் தாஸ் மீனா பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர் ஆவார்.


ராஜஸ்தான், தமிழ், ஆங்கிலம், இந்தி மற்றும் ஜப்பானிய மொழிகளை அறிந்தவர். ஒன்றிய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகத்திலும் பணி புரிந்தவர். ஐஏஎஸ் பணியில் 30 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். ஒன்றிய அரசுப் பணியில் இருந்து கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு பணிக்கு திரும்பினார். இந்நிலையில் தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலாளராக ஷிவ் தாஸ் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் தமிழ்நாட்டின் 49வது தலைமைச் செயலாளராக ஷிவ் தாஸ் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி