தமிழக அங்கன்வாடிகளில் 5,000 காலிப்பணியிடங்கள் – வயது வரம்பில் தளர்வு.. அரசின் அதிரடி உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 29, 2023

தமிழக அங்கன்வாடிகளில் 5,000 காலிப்பணியிடங்கள் – வயது வரம்பில் தளர்வு.. அரசின் அதிரடி உத்தரவு!

தமிழக அங்கன்வாடிகளில் 10 ஆண்டுகள் பணி நிறைவு செய்த உதவியாளர்களை கொண்டு காலியாகவுள்ள பணியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவிட்டுள்ளது.


காலிப்பணியிடங்கள்:

தமிழகத்தில் சுமார் 54,439 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த மையங்களில் 5,000 க்கும் மேற்பட்ட பணியாளர் பணியிடங்கள் காலியாகவுள்ளது. இதனால் ஒரு நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட அங்கன்வாடிகளை கவனிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையில்அரசு அங்கன்வாடி உதவியாளர்களாக பணி புரிந்து 10 ஆண்டுகளை நிறைவு செய்தவர்களை பணியாளர்களாக பணி நியமனம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.

அதாவது காலியாகவுள்ள பணியாளர் பணியிடங்களை 25% உதவியாளர்களை கொண்டு நியமிக்க வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது. மேலும் வயது வரம்பில் தளர்வு அளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு அரசின் விதிமுறைப்படி அங்கன்வாடி உதவியாளர் பணியிடத்திற்கு வயது வரம்பு 20 முதல் 40- க்குள் இருக்க வேண்டும். அதனை தொடர்ந்து பணியாளர் பணியிடத்திற்கு வயது வரம்பு 25 முதல் 35 – குள் இருக்க வேண்டும்.

1 comment:

  1. ஆண்கள் விண்ணப்பிக்க முடியமா??

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி