பள்ளி தலைமை ஆசிரியர் இடமாற்றம்: பள்ளியை புறக்கணித்து மாணவர்கள் பெற்றோர்களுடன் போராட்டம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 14, 2023

பள்ளி தலைமை ஆசிரியர் இடமாற்றம்: பள்ளியை புறக்கணித்து மாணவர்கள் பெற்றோர்களுடன் போராட்டம்!

 

பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயந்தியின் பணியிடமாற்றத்தை ரத்து செய்யக்கோரி மாணவர்கள் பெற்றோர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 


காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் இடையார்பாக்கம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை சுமார் 150 மாணவ, மாணவியர்கள் அருகில் உள்ள கிராமங்களில் இருந்து வந்து கல்வி பயின்று வருகின்றனர்.


இந்த நிலையில் இங்கு பணிபுரிந்து வந்த தலைமையாசிரியர் ஜெயந்தி இடமாற்றம் செய்யப்பட்டார். இதனை அறிந்த மாணவர்கள், தலைமையாசிரியர் ஜெயந்தியின் இடமாற்றத்தை ரத்து செய்யக்கோரி பெற்றோர்கள் மாணவர்களுடன் கடந்த திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.


இந்த நிலையில் இன்று தமிழக முழுவதும் தொடக்கப் பள்ளிகள் கோடை விடுமுறைக்கு பின் தொடங்கப்பட்ட நிலையில் அந்த தலைமை ஆசிரியர் பணிக்கு வராததால் மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாமல் பெற்றோர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவ, மாணவிகள் அதே தலைமை ஆசிரியர் மீண்டும் தங்கள் பள்ளிக்கு தேவை என்ற பதாகைகள் ஏந்தியும், கூக்குரல் இட்டு வகுப்பினை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 


தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சுங்குவார்சத்திரம் காவல் ஆய்வாளர் சங்கர் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.


இது குறித்து பெற்றோர்கள் கூறுகையில், தலைமை ஆசிரியை ஜெயந்தி இப்பள்ளிக்கு வராவிட்டால் எங்கள் குழந்தைகளின் டி.சி-யைப் பெற்றுக் கொண்டு அருகில் உள்ள கிராமங்களிலே நாங்கள் எங்கள் குழந்தைகளை சேர்த்துக் கொள்வோம் என தெரிவித்து வருகின்றனர்.

2 comments:

  1. இந்த காலத்தில் இப்படி ஒரு தலைமை ஆசிரியரா?....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி