ஆசிரியர்கள் பாடவேளைகளை கடன் வாங்க வேண்டாம் - அமைச்சர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 20, 2023

ஆசிரியர்கள் பாடவேளைகளை கடன் வாங்க வேண்டாம் - அமைச்சர்

 

பள்ளிகளில் உடற்கல்வி பாட வேலைகளை கணிதம், அறிவியல் ஆசிரியர்கள் கடன் வாங்க வேண்டாம் என விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுகொண்டுள்ளர்.


 முதலமைச்சர் கோப்பை விளையாடு போட்டிகளில் தஞ்சவூர் மாவட்ட அளவில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா தமிழ் பல்கலை கழகத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர்.

மேடையில் பேசிய அமைச்சர் உதயநிதி மாவட்ட அளவிலான போட்டியில் வென்ற மாணவர்களுக்கு, மாநில, தேசிய, சர்வதேச அளவிலான களங்கள் காத்திருப்பதாக தெரிவித்தார். உடற்கல்வி பாடவேலையை கடன் வாங்காமல் கணிதம், அறிவியல் பாடவேலைகளை விளையட்டுக்கு கடன் கொடுங்கள் என அமைசர் உதயநிதி பேசிய போது பலத்த கரஒலி எழுந்தது.


தஞ்சாவூரில் மற்றுமொரு நிகழ்சியில் கலந்துகொண்ட உதயநிதி ஸ்டாலின் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் ரூ.10கோடி செலவில் அமைக்கபட்ட அதிநவீன பேட் சிடி ஸ்கேன் மையத்தை திறந்து வைத்தார். அதே வளாகத்தில் ரூ.46கோடி மதிபீட்டில் ஒருங்கினைந்த புற்றுநோய் சிகிட்சை மையதிற்கும் அவர் அடிகல் நாடினார்.


இந்த விழாவில் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், புற்றுநோயை துள்ளியமாக கண்டறியும் பேட் சிடி ஸ்கேன் கருவி தமிழ்நாட்டில் 2 அரசு மருத்துவமனைகளில் மட்டுமே இருப்பதாக குறிப்பிட்டார். முதலமைச்சரின் உத்தரவின் பேரில், நெல்லை, தஞ்சாவூரில் இந்த கருவி அமைக்கபட்டுள்ள நிலையில் விரைவில் சேலம், கோவை, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைகளிலும் கொண்டுவர இருப்பதாக தெரிவித்தார்.

4 comments:

  1. கடன் வாங்கவில்லை ஐயா... ஆசிரியர் இல்லாததால் அதிகமான பாடவேலை கொடுக்கிறார்கள் ஐயா...

    ReplyDelete
  2. ஐயா முதலில் உடற்கல்வி ஆசிரியர்களை நியமனம் செய்யுங்கள்.

    ReplyDelete
  3. பகுதி நேர ஆசிரியர்களை "பணிநிரந்தரம்" முதல்வர் தேர்தல் வாக்குறுதியில் கூறியதுப்போல் "பணிநிரந்தரம்" செய்து அரசு ஆணை வழங்க வேண்டும்.

    ReplyDelete
  4. தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வாழ்க்கை வீணாகிவிட்டது. பத்தாண்டு காலம் எவ்வித நியமனமும் செய்யாமல் கடந்த அதிமுக ஆட்சியில் வீணாக்கி விட்டார்கள். இவர்களும் விடியல் கொடுப்பார்கள் என்று நம்பி வாக்குகள் அளித்தோம். இன்னும் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்து இந்த வருடம் ஓட்டப் போகிறார்கள். இதைப்பற்றி தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் கவலைப்பட மாட்டார்கள். பகுதி நேர ஆசிரியர்கள் ஏதாவது அரசிடம் கோரிக்கை வைத்தால் கொதித்து விடுவார்கள் நீங்கள் ஏன் தேர்வு எழுதி வரவில்லை என்று.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி