மருத்துவ கவுன்சிலிங்குக்கு முன் இன்ஜி., சேர்க்கை: உயர்கல்வித்துறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 3, 2023

மருத்துவ கவுன்சிலிங்குக்கு முன் இன்ஜி., சேர்க்கை: உயர்கல்வித்துறை

 

நீட் தேர்வு முடிவு வர தாமதமானாலும், இன்ஜினியரிங் கவுன்சிலிங்கை மருத்துவ கவுன்சிலிங்குக்கு முன்பே நடத்தலாம் என்பதை, இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டி உறுதி செய்துள்ளது.


பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கு, ஆன்லைன் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.


இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங், ஜூலை 7ல் துவங்கி, செப்., 3ல் முடிகிறது. இன்ஜினியரிங் சேரும் மாணவர்களில், 500க்கும் மேற்பட்டவர்கள், மருத்துவ கவுன்சிலிங்கில் இடம் கிடைத்ததும், மாற்று சான்றிதழ் வாங்கி விட்டு, மருத்துவம் படிக்க சென்று விடுவர்.


அவர்கள் விட்டுச் சென்ற இடங்களை மீண்டும் நிரப்ப முடியாத நிலை ஏற்படும்.


எனவே, மருத்துவ கவுன்சிலிங்குக்கு பிறகு, இன்ஜினியரிங் கவுன்சிலிங்கை நடத்தலாம் என, தமிழக உயர்கல்வித் துறை ஏற்கனவே திட்டமிட்டது.


ஆனால், மணிப்பூரில் நீட் தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், இந்த ஆண்டு நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என, தெரிகிறது.


அவ்வாறு தாமதமானால், மருத்துவ கவுன்சிலிங்கும், அதன்பின், இன்ஜினியரிங் கவுன்சிலிங்கும் தாமதமாகும். இதுகுறித்து, இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டி உறுப்பினர்கள் கூடி, ஆலோசனை நடத்தியுள்ளனர்.


இதில், உச்சநீதிமன்றம் மற்றும் ஏ.ஐ.சி.டி.இ., உத்தரவின்படி, இன்ஜினியரிங் கவுன்சிலிங்கை தாமதப்படுத்த முடியாத சூழல் உள்ளது.


எனவே, திட்டமிட்டபடி ஜூலையிலேயே இன்ஜினியரிங் கவுன்சிலிங்கை நடத்தி விடலாம் என, உறுதி செய்துள்ளதாக, உயர்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி