தமிழ்ப் பல்கலை.யில் பி.எட் . , எம்.எட் . நேரடி சேர்க்கை... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 14, 2023

தமிழ்ப் பல்கலை.யில் பி.எட் . , எம்.எட் . நேரடி சேர்க்கை...


தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 2023 - 2024 ஆம் கல்வியாண்டுக்கான பி.எட் . , எம்.எட் . நேர டிச் சேர்க்கை தொடங்கி நடைபெறுகிறது.
இதுகுறித்து பல்கலைக்கழகப் பதிவாளர் ( பொ ) சி . தியாகராஜன் தெரிவித்தது : தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறையில் இளங்கல்வியியல் ( பி.எட் . ) இரண்டாண்டு முழுநேரப் பட்டப்படிப்பு மற்றும் கல்வியி யல் நிறைஞர் ( எம்.எட் . ) இரண்டாண்டு முழுநேரப் பட்டப் படிப்பில் 2023 - 2024 ஆம் கல்வியாண்டுக்கான நேரடிச் சேர்க்கை ஜூன் 5 ஆம் தேதி தொடங்கப்பட்டது.

 சேர்க்கை விண்ணப்பங்களை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறையில் ஜூலை 31 வரை நேரிலும் , தமிழ்ப் பல்கலைக்கழக இணையவழியிலும் பெற்றுக் கொள்ளலாம்.

 மேலும் விவரங்களுக்கு www.tamiluniversity.ac.in என்ற இணையதளத்திலும் , 04362 - 226720 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி