School Morning Prayer Activities - 13.06.2023 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 12, 2023

School Morning Prayer Activities - 13.06.2023

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 13.06.23

திருக்குறள் :


பால் :அறத்துப்பால்


இயல்: இல்லறவியல்


அதிகாரம்: பயனில சொல்லாமை

குறள் : 192


பயனில பல்லார்முன் சொல்லல் நயனில

நட்டார்கண் செய்தலிற் றீது.


விளக்கம்:

ஒருவன் பலருக்கும் முன்னே பயனற்ற சொற்களைச் சொல்வது, நண்பர்களுக்குத் தீமை செய்வதைக் காட்டிலும் கொடியது.


பழமொழி :

அலைபாயும் மனதால் எதையும் செய்ய இயலாது. 


A rolling stone gathers no moss


இரண்டொழுக்க பண்புகள் :


1. நிறைகுடம் போல ஆர்ப்பாட்டம் செய்யாமல் அமைதியாக உறுதியாக பேசுவேன். 


2.  என் கண் இவ்வுலகை கண்டு கற்றுக் கொள்ள உதவும் ஒரு சன்னல். எனவே அதை நான் பாதுகாப்பேன்.

பொன்மொழி :


கல்வியே சுதந்திரத்தின் தங்கக் கதவை திறப்பதற்கான சாவியாகும். 


                                                        - ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர்.


பொது அறிவு :


1. உலகில் மொத்தம் எத்தனை வானிலை ஆராய்ச்சி மையங்கள் உள்ளன?


12500.        


2.மூன்று தலைநகரங்களைக் கொண்ட நாடு எது? 


தென்னாப்பிரிக்கா


English words & meanings :


 derail - upset தடம் புரளுதல் abbreviation - to cut short வார்த்தைகளின் சுருக்கம்

ஆரோக்ய வாழ்வு :


தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் முடிந்த அளவு 2 ல் இருந்து 3 டம்ளர் தண்ணீர் (உடலுக்கு ஏற்றப்படி) குடிப்பது நல்லதாகும்.


நீதிக்கதை


திருப்தி வேண்டும்


தெரு சுற்றிக் கொண்டிருந்த ஒரு நாய் ஒரு நாள் கசாப்பு கடைப் பக்கம் சென்றது.


ஒரு கடைக்காரன் ஏமாந்திருந்த சமயமாகப் பார்த்து அவன் கடையில் வைத்திருந்த பெரிய ஆட்டுத் தொடையைத் தூக்கி வந்து விட்டது.


"இன்று எனக்கு அதிர்ஷ்ட காலம் போலும்! பெரிய இறைச்சித் துண்டு ஒன்று கிடைத்துவிட்டது. இதை யார் கண்களிலும் படாமல் தனியான ஓரிடத்தில் வைத்துச் சாப்பிடப் போகிறேன்" என்று தன் மனத்திற்குள் எண்ணியவாறு நாய் ஓடிக் கொண்டிருந்தது.


வழியில் ஒரு சிறு ஆறு இருந்தது. ஆற்றைக் கடப்பதற்கு மரப்பாலம் ஒன்று போட்டிருந்தார்கள்.


நாய் மரப்பலத்தின் மீது சென்று கொண்டிருந்த போது தற்செயலாக


ஆற்று நீரைக் கவனித்தது.


ஆற்று நீரில் இறைச்சித் துண்டைக் கவ்வி இருக்கும் அதன் உருவம் பிரதிபலித்தது.


ஆற்றுக்குள் வேறொரு நாய் பெரிய இறைச்சித் துண்டு ஒன்றைக் கவ்வியவாறு நிற்பதாக நாய் நினைத்துக் கொண்டது.


அந்த நாயின் இறைச்சித் துண்டையும் பிடுங்கிக் கொண்டால் இரண்டு நாளைக்கு உணவைப் பற்றிக் கவலையே இல்லை என்று நாய் நினைத்துக் கொண்டது.


நீரில் தெரியும் நாயை மிரட்டித் துரத்த எண்ணிய நாய் வாயைத் திறந்து குரைக்கத் தொடங்கியது.


உடனே அதன் வாயிலிருந்து இறைச்சித் துண்டு ஆற்று நீரில் விழுந்து மிதந்து கொண்டே சென்று விட்டது.


உள்ளதைக் கொண்டு திருப்தி அடையாமல் பிறர் பொருளுக்காகப் பேராசை கொண்டதன் காரணமாக நாய் கிடைத்த இறைச்சித் துண்டையும்


இழந்து ஏமாற வேண்டி வந்தது.


இன்றைய செய்திகள் - 13.06. 2023


*ஜூன் 15-ல் கரையை கடக்கிறது பிபோர் ஜோய் புயல்.


*ஜூன் 15ஆம் தேதி பன்னோக்கு மருத்துவமனை திறப்பு.


*சிறுவாணி, பில்லூர் அணைகளில் தூர் வாராததால் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்.


*ஊரகப் பகுதிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்களின் மாதாந்திர மதிப்பூதியம் உயர்த்தி அரசாணை வெளியீடு.


*கிரிக்கெட் வீரர் சுப்மான் கில்லுக்கு அபராதம்.


*திருத்தப்பட்ட விதிகளுடன் கோவையில் இன்று துவங்குகிறது தமிழ்நாடு பிரீமியர் லீக்(TNPL) கிரிக்கெட்.


Today's Headlines


* Pibor Joy cyclone crosses the seashore on June 15.


 *Opening of multi-specialty Hospital is scheduled for 15th June.


 *As there is no proper dredging in the dams there may be a risk of shortage of drinking water in Siruvani and Pillur dams.


 *A GO is released to increase the monthly salary of sanitation guards working in rural areas.


 *Cricketer Subman Gill was fined.


 * Tamil Nadu Premier League (TNPL) cricket starts today in Coimbatore with revised rules.

 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி