ஆசிரியர்களின் பதவி உயர்விற்கு TET தேர்வு அவசியமில்லை - டிட்டோஜேக் கூட்டத்தில் தீர்மானம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 6, 2023

ஆசிரியர்களின் பதவி உயர்விற்கு TET தேர்வு அவசியமில்லை - டிட்டோஜேக் கூட்டத்தில் தீர்மானம்!

 

டிட்டோஜேக் கூட்டம் இன்று சென்னையில் கூடியது.


         தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு(டிட்டோ ஜேக்) வின் மாநில உயர்மட்டக்குழுக்கூட்டம் இன்று சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அலுவலகத்தில் நடைபெற்றது.


 இக்கூட்டத்தில்

(1)தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.

(2)தமிழக ஆசிரியர் கூட்டணி.

(3)தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.

(4)தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.

(5)தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்(சண்முகநாதன்).

(6)தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்(தியோடர்).

(7)தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.

(8)JSR தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.

(9)தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம்.

(10)தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி.


ஆகியவை சங்க பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

      

இக்கூட்டத்தில் ஆசிரியர்களின் பதவி உயர்விற்கு TET தேர்வு அவசியமில்லை என்பதை வலியுறுத்தி பேசப்பட்டது.


தமிழக முதல்வர்,பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்,தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோரை சந்தித்து வலியுறுத்துவது எனவும் தேவைப்படும்பட்சத்தில் நீதிமன்றத்தை நாடுவது எனவும் முடிவு செய்யப்பட்டது. 


போராட்ட நடவடிக்கையில் ஈடுபடுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

 

இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் இயற்றப்பட்டது.


(1)12.6.2023 ல் வட்டாரத்தலைநகரில் ஆர்ப்பாட்டம்.


(2)26.6.2023 ல் மாவட்டத்தலைநகரில் ஆர்ப்பாட்டம்.


(3)14.7.2023 ல் மாநில தலைநகரில் சென்னையில் கோட்டையை நோக்கி பேரணி மற்றும் முதல்வரை சந்தித்து கோரிக்கை மனுவை வழங்குதல்.


(4)மீண்டும் டிட்டோஜேக் கூட்டத்தை 18.6.2023 ல் சென்னையில் தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநில அலுவலகத்தில் கூட்டுதல்.

15 comments:

  1. தகுதி தேர்வு அவ்வளவு கடினமான தேர்வா ? தேர்ச்சி பெற முடியாது என்பதால் அனைத்து சங்கமும் எதிர்க்கிறதா ...emis ல் தகவல்களை பதிவேற்றம் செய்ய தெரியாத பல பேர் தலைமையாசிரியராக இருக்காங்க இதைஎல்லாம் மாற்ற பதவி உயர்விற்கு ஒரு தகுதி தேர்வு அவசியம்.

    ReplyDelete
  2. நண்பரே, tet-க்கும் தலைமை ஆசிரியர் பதவிக்கும் எந்த சம்மந்தமும் இல்லையப்பா...

    ReplyDelete
  3. பல நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் களுக்கு வேலை செய்ய தெரிய வில்லை. மற்ற ஆசிரியர் தலைமை ஆசிரியர் பணியையும் சேர்த்து செய்கின்றனர். தலைமை ஆசிரியர் சும்மா 1 லட்சம் சம்பளம் வாங்குகின்றனர்.

    ReplyDelete
  4. பல நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரியல் எஸ்டேட் தொழில் செய்கின்றனர். ஆசிரியர் சங்க தலைவர் ஆக இருக்கின்றனர். சொந்த மாவட்டத்தில் ஆசிரியர் களுக்கு பணி வழங்க கூடாது. அனைத்து ஆசிரியர் களையும் வேறு மாவட்டம் மாற்ற வேண்டும்

    ReplyDelete
  5. TET passed candidates r 100 % Eligible for Head masters.

    ReplyDelete
  6. Amam ungalukku tet avasiyam illa ... Velaiyum avasiyam illa... Veliya ponga...

    ReplyDelete
    Replies
    1. Tet partha velai parkum teacher kaluku bayamo bayam yenave supreme courtuku povanga

      Delete
  7. Ithe avanga pass paniruntha kandippa tet venumnu solluvanga

    ReplyDelete
  8. இவர்களெல்லாம் சினியாரிட்டியில் வந்த மேதைகள்

    ReplyDelete
    Replies
    1. Ithellam district seniorityal vanitha kodumai I dted finished 1999_2001 dindigul district tet 1@ tet 2 pass 2013 and 2017 but job no yet. Enna pandrathu theriyala but ivargal tet general bayam salary matting thevai

      Delete
  9. உனக்கு வந்தா இரத்தம்!!! மற்றவர்களுக்கு வந்தா தக்காளி சட்னியா????? போய் தேர்வுக்கு படிக்கின்ற வேலையை பாருங்க....

    ReplyDelete
  10. இந்த சங்கங்கள் பற்றி கவலை வேண்டாம், இவர்கள் ஓய்வு வூதியம் நு கூட சொல்றாங்க, வந்ததா? தைரியமாக டெட் தேர்ச்சி பெறுகிறேன் என கூற வேண்டியது தானே. .

    ReplyDelete
  11. ஆசிரியர் பணியில் உள்ளவர்களுக்கு தகுதி தேர்வு வைத்தால் அதில் பாதி ஆசிரியர்கள் திறமை இல்லை என்பது உறுதியாகிவிடும் இவர்கள் பணியில் இருப்பதே பெரிய விஷயம் இதுல வேற பதவி உயர்வுக்கு தகுதித் தேர்வு வேண்டாம் என்று கூறுவது நகைச்சுவையாக இருக்கிறது

    ReplyDelete
  12. தேவையில்லையா ? அல்லது உங்களுக்கு டெட் தேர்ச்சி பெற தகுதி இல்லையா? இப்படி தீர்மானம் போட வெட்கமாக இல்லையா?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி