TNPSC தேர்வு முடிவுகள்: உத்தேச தேதி அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 27, 2023

TNPSC தேர்வு முடிவுகள்: உத்தேச தேதி அறிவிப்பு

 தமிழக அரசு துறைகளில், பல்வேறு பதவிகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., சார்பில் குரூப் - 1, இன்ஜினியரிங் பணி உட்பட பல்வேறு போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த தேர்வுகளின் தற்போதைய நிலை மற்றும் தேர்வு முடிவு வெளியாகும் தேதி விபரம், டி.என்.பி.எஸ்.சி.,யின் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் நேற்று வெளியானது. 


அதில் 5,446 பணியிடங்களுக்கான குரூப் - 2 பிரதான தேர்வு முடிவு இந்த ஆண்டு டிசம்பரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.வனத்துறை தொழில் பழகுனர் பணி தேர்வு, தமிழக அரசு துறைகளில், உதவி பிரிவு அதிகாரி பணி தேர்வு, குரூப் - 3 பதவிக்கான தேர்வு, ஒருங்கிணைந்த புள்ளியியல் பணி தேர்வு, மீன் வளத்துறை ஆய்வாளர் பதவிக்கான நேர்முக தேர்வுக்கு முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகின்றன. கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பதவி, மாவட்ட கல்வி அதிகாரி பணிக்கான முதல்நிலை தகுதி தேர்வு, வனத்துறை உதவி காவலர், நுாலகத்துறை பதவிக்கான தேர்வு ஆகியவற்றுக்கு, ஜூலையில் முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. இன்ஜினியரிங் பதவியில், 1,083 காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை சாலை ஆய்வாளர் பதவி தேர்வு முடிவுகள்ஆகஸ்டில் வெளியாகும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி