விலைவாசி உயர்வு குறியீட்டு எண் அடிப்படையில் அகவிலைப் படி உயர்வு மே'2023 ன் படி 3% உயர்ந்திருக்கிறது.
ஜூன்' 2023 ல் இது மேலும் 1% உயர்ந்து, 01.07.2023 முதல் 4% ஆக உயரக் கூடும் என கணிக்கப் பட்டுள்ளது.
அதாவது 01.07.2023 முதல் அகவிலைப்படி 42% லிருந்து 46% ஆக உயர அதிக வாய்ப்பு உள்ளது. எனினும் அகவிலைப்படி உயர்வு 3% ஆக இருக்குமா? அல்லது 4% ஆக உயருமா? என்பது 31.07.2023 அன்று தெளிவாக தெரிந்து விடும்.
இதன் பின் இதற்கான கருத்துருக்கள் மத்திய அரசுக்கு அனுப்பப் பட்டு, 2023 செப்டம்பர் மாதம் மூன்றாம் வாரம் இதற்கான முறையான அறிவிப்பு வெளியாகும்.
மத்திய அரசின் அறிவிப்பு வெளியான பின், மாநில அரசுகள் அகவிலைப்படி உயர்வை தனது ஊழியர்களுக்கு வழங்கும்.
ஜூலை முதல் செப்டம்பர் வரை நிலுவைத் தொகையாகவும், அக்டோபர் மாதம் முதல் ஊதியத்துடனும் இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப் படும்.
2024 மே மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால், காலதாமதமின்றி உரிய காலத்தில் அகவிலைப்படி உயர்வு வழங்கப் படும் எனத் தெரிகிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி