03.08.2023 ( வியாழக்கிழமை ) உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 21, 2023

03.08.2023 ( வியாழக்கிழமை ) உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

 

நாமக்கல் மாவட்டம் , கொல்லிமலைப் பகுதியில் சங்க காலத்தில் புகழ்பெற்ற கடைஏழு வள்ளல்களில் ஒருவராகத் திகழ்ந்த வல்வில் ஓரி மன்னரின் வீரத்தினையும் , கொடைத்தன்மையினையும் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 17 மற்றும் 18 ஆகிய நாட்களில் அரசு சார்பில் வல்வில் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி , நடப்பு ஆண்டில் எதிர்வரும் 2.8.2023 மற்றும் 3.8.2023 ஆகிய நாட்களில் அரசின் சார்பாக வல்வில் ஓரி விழா கொண்டாடப்படவுள்ளது.


 இவ்விழாவிற்காக நாமக்கல் மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் , பள்ளி , கல்லூரிகளில் பயிலும் மாணவ , மாணவியர்கள் , அரசு அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை பணியாளர்கள் ஆகியோர் குடும்பத்துடன் கொல்லிமலைப் பகுதிக்கு வருகை புரிந்து சிறப்பிக்க உள்ளதால் , எதிர்வரும் , 3.8.2023 ( ஆடி மாதம் 18 - ஆம் நாள் ) வியாழக்கிழமை அன்று நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. மேலும் , இந்த உள்ளூர் விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில் 128.2023 சனிக்கிழமை அன்று பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

Namakkal District local holiday reg - Download here


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி