10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 80%க்கும் மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் வித்யாதன் கல்வி உதவித்தொகை பெற 15.08.2023க்குள் விண்ணப்பிக்கலாம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 22, 2023

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 80%க்கும் மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் வித்யாதன் கல்வி உதவித்தொகை பெற 15.08.2023க்குள் விண்ணப்பிக்கலாம்.

வித்யாதன் கல்வி உதவித்தொகை பெற வேண்டிய விண்ணப்பம் குறைந்த குடும்ப வருமானம் பெற்று பத்தாம் வகுப்பினை நடப்பு கல்வியாண்டில் தேர்ச்சி பெற்றிருக்கும் மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும் ) சரோஜினி தாமோதரன் நிறுவனம் திரு . S.D. ஷிபுலால் , ( இன்போசிஸ் ) மற்றும் திருமதி.குமாரி ஷிபுலால் ( காப்பாளர் ) கட்டமைப்பு பெற்று வித்யாதன் கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது.


 உதவிப்பணம் , இரண்டு இலட்சத்திற்கும் குறைவாக வருமானம் பெறும் குடும்பங்களின் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது தமிழ் நாடு மற்றும் புதுச்சேரியில் பதினொன்றாம் வகுப்பு பயில்வோர் கல்வி உதவித்தொகை பெறும் திட்டம் - 2023 இந்த உதவித்தொகை பெறும் திட்டத்தின் மூலம் ஆண்டு வருமானம் ரூபாய் இரண்டு இலட்சத்திற்கும் கீழ் பெறும் குடும்பங்களின் மாணவர்கள் பயன் பெறுவார்கள் . 2023 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் , 80 சதவீத மதிப்பெண்களுக்கு அதிகமாகவும் , மாற்றுத்திறனாளி மாணவர்கள் 60 % மதிப்பெண்களுக்கு மேலும் பெற்றிருத்தல் வேண்டும்.


 தமிழ் நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள தகுதியான மாணவர்கள் www.vidyadhan.org என்னும் இணையதள முகவரிக்கு சென்று ஆன்லைன் மூலம் ஆகஸ்ட் 15 , 2023 வரை விண்ணபிக்கலாம். மேலும் கேள்விகள் மற்றும் விவரங்களுக்கு , தமிழ் நாடு மாணவர்கள் vidyadhan.tamilnadu@sdfoundationindia.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் , புதுச்சேரி மாணவர்கள் vidyadhan.puducherry@sdfoundationindia.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் எழுதுங்கள் அல்லது 9663517131 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள் .

Vidhyadhan Scholarship instructions - Download here...


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி